சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தென்காசி பாண்டியர்களில் முதல் மன்னனான சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றறிந்தவுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன்.
தென்காசி பாண்டியர்களின் குல குருவான விந்தையர் சித்தரின் சமாதி. குருவை வணங்கி நிற்கும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான்.

ஆற்றிய போர்கள்

திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன்.

ஆற்றிய அறப்பணிகள்

  • தென்காசி குன்றமன்ன கோயிலைக் கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் தேவதானம், இறையிலியாக பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டி முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
  • தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
  • தென்காசிக் கோயிலில் இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் எழுதிய பாடல்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலிலேயே பிற்காலத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.