கொல்கத்தா கவிதை சங்கமம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொல்கத்தா கவிதை சங்கமம் (Kolkata Poetry Confluence) என்பது கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கவிதை வெளியீட்டாளர்கள் மற்றும் கவிதை பிரியர்களை கொல்கத்தாவில் ஒன்றிணைக்கும் ஒரு பன்னாட்டு பன்மொழி இலக்கிய விழாவாகும்.[1] இந்த நிகழ்வை அண்டோனிம் இதழும் பாசா சம்சாத் புத்தக வெளியீட்டு நிறுவனமும் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றன. கவிதைப் புத்தக கண்காட்சி ஒன்றும் இவ்விழாவில் இடம் பெற்றது.[2]

பங்கேற்பாளர்கள்

சங்கமத்தில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மொழிகளில் கவிஞர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். சுதேசுனா ராய், அனிந்தியா சாட்டர்சி, அபிசித் குகா மற்றும் சிறீசாதோ போன்ற முன்னணி திரைப்பட மற்றும் ஊடக நபர்களும் இவ்விழா பங்கேற்பாளர்களில் அடங்குவர்.[3]

2022 நிகழ்வு

கொல்கத்தா கவிதைகள் சங்கமம் 2022 சூன் மாதம் 11 முதல் 13 ஆம் தேதிவரை "உள்ளடக்கம்" என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராசிரியை சைதி மித்ரா சங்கமத்தின் இயக்குநராக இருந்தார். [4] :-

விருது பெற்றவர்கள்

கொல்கத்தா கவிதை சங்கமம், இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் கவிதைகளை மொழிபெயர்த்த சிறந்த படைப்புகளுக்காக சிபானந்த தாசு விருது மற்றும் சோனாலி கோசல் விருதை வழங்கியது. [5] சிபானந்த தாசு விருது பெற்றவர்கள் பின்வருமாறு [6] :-

  • அசாமிய மொழி :- சமீர் தந்தியை மொழிபெயர்த்ததற்காக அர்சிதா இயா
  • வங்காளம் :- முகமது நூருல் ஊதாவை மொழிபெயர்த்ததற்காக இந்திராணி பட்டாச்சார்யா
  • இந்தி :- அனாமிகாவை மொழிபெயர்த்ததற்காக பல்லவி சிங்கு
  • மராத்தி :- சந்தோசு பவாரை மொழிபெயர்த்ததற்காக சந்தோசு ரத்தோட்டு
  • ஒடியா :- சரோச்சு பாலை மொழிபெயர்த்ததற்காக சிநேகபிரவா தாசு
  • தமிழ் :- சுகிர்தராணியை மொழிபெயர்த்ததற்காக தீபலட்சுமி இயோசப்
  • உருது :- முனைவர் இராணாவை மொழிபெயர்த்ததற்காக தபன் குமார் பிரதான்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கொல்கத்தா_கவிதை_சங்கமம்&oldid=19355" இருந்து மீள்விக்கப்பட்டது