கே. எஸ். ஆனந்தன்
Jump to navigation
Jump to search
கே. எஸ். ஆனந்தன் | |
---|---|
முழுப்பெயர் | கார்த்திகேசு |
சச்சிதானந்தம் | |
பிறப்பு | 30-03-1940 |
பிறந்த இடம் | கோண்டாவில், |
யாழ்ப்பாணம் | |
மறைவு | 18-11-2021 |
இணுவில், | |
யாழ்ப்பாணம் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
கல்வி | இணுவில் சைவ |
நாவலப்பிட்டி கதிரேசன் | |
கல்லூரி, | |
கொக்குவில் | |
இந்துக் கல்லூரி | |
வட்டுக்கோட்டை | |
யாழ்ப்பாணக் கல்லூரி | |
பணி | விவசாயி |
பெற்றோர் | கார்த்திகேசு |
கே. எஸ். ஆனந்தன் (கார்த்திகேசு சச்சிதானந்தம், மார்ச் 30, 1940 – நவம்பர் 18, 2021) ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். நாடகத்துறையிலும் ஈடுபட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. எஸ். ஆனந்தன் இணுவில் சைவ மகாசனா வித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று, பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார்.
இவரது ஆக்கங்கள்
இருபத்து நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஒன்பது நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், மற்றும் பல ஈழத்து இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இவரது சிறுகதைகளும் புதினங்களும் வெளிவந்துள்ளன. இவரின் பத்து புதினங்கள் நூல்களாக வெளிவந்தன.
- உறவும் பிரிவும் (1964)
- தீக்குள் விரலை வைத்தால் (1972)
- மர்மப்பெண் (1974)
- கர்ப்பக் கிருகம் (1974)
- காகித ஓடம் (1974)
- சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
- கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
- அமராபுரி இளவரசனின் அற்புத சாகசங்கள் (சிறுவர் புதினம், 2011)
விருதுகளும் சிறப்புகளும்
- கலாபூசணம் பட்டம்
- சிறுவர் இலக்கியத்திற்காக யாழ் இலக்கிய வட்டம் இவரைக் கௌரவித்தது.
- நாடகத்திற்காக அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் பரிசளித்தது.