கே. எம். பி. ராஜரத்தினா
கே. எம். பி. ராஜரத்தினா | |
---|---|
அஞ்சல், ஒலிபரப்பு, தகவல் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் | |
பதவியில் 1956–1956 | |
Ceylonese நாடாளுமன்றம் for வெலிமடை | |
பதவியில் 1956–1956 | |
முன்னையவர் | எம். பி. பம்பரப்பான |
பின்னவர் | குசுமா ராஜரத்தினா |
பதவியில் 1960–1965 | |
முன்னையவர் | குசுமா ராஜரத்தினா |
பின்னவர் | பேர்சி சமரவீர |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 அக்டோபர் 1927 |
இறப்பு | (அகவை 83) |
அரசியல் கட்சி | தேசிய விடுதலை முன்னணி |
துணைவர் | குசுமா ராஜரத்தினா |
முன்னாள் கல்லூரி | இலங்கைப் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
கோனார முதியான்சிலாகே பொடியப்புகாமி ராஜரத்தினா (Konara Mudiyanselage Podiappuhamy Rajaratne, 22 அக்டோபர் 1927 – சனவரி 2011) இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜரத்தினா 1927 அக்டோபர் 22 இல் பிறந்தார்.[1][கு 1] இவர் கோட்டே ஆனந்த சாத்திராலயாவில் கல்வி பயின்றார். அங்கேயே இவர் தனது பின்னாளைய மனைவி குசுமாவைச் சந்தித்தார்.[2][3] பள்ளிப் படிப்பை முடித்ததும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரலாற்றில் பட்டம் பெற்றார்.[2][3] பட்டப் படிப்பின் பின்னர் ராஜரத்தினா ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[2][3]
ராஜரத்தினா குசுமாவை 1950 ஆகத்து 24 இல் திருமணம் புரிந்தார்.[2][3] இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்[2][3]
அரசியல்
ராஜரத்தினா ஒரு தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியாகவும், தமிழின எதிர்ப்பாளராகவும் அடையாளப்படுத்தப்பட்டார்.[4][5][6][7] இவர் எஃப். ஆர். ஜெயசூரியா என்பருடன் இணைந்து சிங்களத்தைத் தனியான ஆட்சி மொழியாக்குவதற்குப் பரப்புரை செய்த சிங்கள மொழி முன்னணி என்ற அமைப்புடன் செயலாற்றி வந்தார்.[8][9][10]
ராஜரத்தினா 1952 நாடாளுமன்றத் தேர்தலில் வெலிமடைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவதாகத் தெரிவு செய்யப்பட்டுத் தோற்றார்.[11][12] 1956 தேர்தலில் மகாஜன எக்சத் பெரமுன சார்பில் வெலிமடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[13] தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இவர் அஞ்சல், ஒலிபரப்பு, தகவல் துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5] புதிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அரசு சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்தத் தீர்மானித்தது. இதனால் தமிழர் வாழும் பகுதிகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன. சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ராஜரத்தினா முக்கிய தூண்டுகோலாக இருந்து செயல்பட்டார்.[14] ஆரம்பத்தில் இச்சட்ட முன்வரைவில் "நியாயமான தமிழ் மொழிப் பயன்பாடு" குறித்து பண்டாரநாயக்கா தயாரித்த 4 அம்சத் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்னால் 1957 சூன் 11 அன்று இலங்கைப் பல்கலைக்க்ழக விரிவுரையாளர் எப். ஆர். ஜெயசூரியவுடன் இணைந்து ஜெயரத்தினாவும் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை நடத்தினர்.[15][16][17][18][19]
1956 சூன் 5 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து சா. ஜே. வே. செல்வநாயகம் தலைமையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் சத்திஆக்கிரகப் போராட்டத்தை நடத்தினர்.[20] ராஜரத்தினாவின் தலைமையிலான சிங்களக் குண்டர்கள் காவல்துறையினரின் முன்னிலையில் போராட்டக்காரர்களைத் தாக்கி, தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. மு. வி. நாகநாதன், வ. ந. நவரத்தினம் ஆகியோரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் போட்டனர்.[5][21][22]
இலங்கைத் தமிழரசுக் கட்சி திருகோணமலையில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த பண்டாரநாயக்கா அனுமதிக்காத காரணத்தால், ராஜரத்தினா அரசில் இருந்து விலகினார்.[5]
வெலிமடையில் இடம்பெற்ற 1956 தேர்தல் செல்லுபடியாகாதென 1956 அக்டோபர் 1 இல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து,[12] ராஜரத்தினா நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்.[23] அதன் பின்னர் ராஜரத்தினா 1957 இல் தேசிய விடுதலை இயக்கம் (என்.எல்.எஃப்) என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார்.[24][25] 1958 தமிழருக்கு-எதிரான கலவரங்களை அடுத்து இக்கட்சி தடை செய்யப்பட்டது.[26][27] ராஜரத்தினா சிறீ ஜெயவர்தனபுர கோட்டையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[28][29]
ராஜரத்தினா 1960 மார்ச் தேர்தலில் வெலிமடை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[30] 1960 சூலை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[31] 1961 மே 25 இல் நாடாளுமன்ற இருக்கையை இரண்டாம் தடவையாக இழந்தார்.[23] ஆனாலும், 1962 சூன் 28 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[32]
1965 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார்.[33] தேர்தலின் பின்னர் இவரது என்.எல்.எஃப் கட்சி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தது. ஊவா-பரணகமை தொகுதியில் வெற்றி பெற்ற இவரது மனைவி குசுமா நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[34] டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து குசுமா அரசில் விலகினார்.[7][34] ராசரத்தினா பின்னர் மூதவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு, மூதவை 1972 இல் கலைக்கப்படும் வரை அப்பதவியில் இருந்தார்.[2][7]
ராஜரத்தினாவும் அவரது மனைவியும் பின்னர் அரசியலில் இருந்து விலகி வழக்கறிஞர்களாகப் பணியாற்றினர்.[2][3] 2001 தேர்தலில் சிகல உறுமய கட்சியின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனாலும், அக்கட்சி தேர்தலில் எந்த இருக்கைகளையும் வெல்ல முடியவில்லை.[7][35][36] ராசரத்தினா 2011 சனவரியில் காலமானார்.[2][37]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவுகள் |
---|---|---|---|---|
1952 நாடாளுமன்றம்[11] | வெலிமடை | தெரிவு செய்யப்படவில்லை | ||
1956 நாடாளுமன்றம்[13] | வெலிமடை | எம்.ஈ.பி | தெரிவு | |
1960 மார்ச் நாடாளூமன்றம்[30] | வெலிமடை | என்.எல்.எஃப் | தெரிவு | |
1960 சூலை நாடாளுமன்றம்[31] | வெலிமடை | என்.எல்.எஃப் | தெரிவு | |
1962 இடைத்தேர்தல்[32] | வெலிமடை | என்.எல்.எஃப் | தெரிவு | |
1965 நாடாளுமன்றம்[33] | வெலிமடை | என்.எல்.எஃப் | தெரிவு செய்யப்படவில்லை |
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "Directory of Past Members: Konara Mudiyanselage Podiappuhamy Rajaratna". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2585.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Marasinghe, Sandasen; Mudalige, Disna (25-06-2011). "Condolence Messages: 'K M P Rajaratne had many positive humane qualities'". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2011/06/25/pol03.asp.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Ratnakara, Sriya (22-07-2007). "A born fighter who stood up for her principles". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/070722/Plus/pls6.html.
- ↑ Akurugoda, S. (31-12-2014). "Open and secret pacts". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002931/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=116856.
- ↑ 5.0 5.1 5.2 5.3 DeVotta, Neil (2004). Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka. Stanford University Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8047-4924-8. https://books.google.com/books?id=6RSHzj2EU-cC.
- ↑ Rajasingham, K. T.. "Chapter 16: 'Honorable wounds of war'". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2001-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011215123938/http://atimes.com/ind-pak/CK24Df05.html. பார்த்த நாள்: 2018-09-22.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Merry-go-round - Mr. Rajaratne rides again". டெய்லி நியூசு. 24-11-2001. http://archives.dailynews.lk/2001/11/24/pol20.html.
- ↑ Abeyesekera, Kirthie (1990). Among my souvenirs: my life as a roving reporter. Lake House. பக். 59. https://books.google.co.uk/books?id=y9wLAAAAIAAJ.
- ↑ Kurukularatne, Buddhika (6 மார்ச் 2005). "How Ranjan Wijeratne saved my life". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002145/http://www.island.lk/2005/03/06/features9.html.
- ↑ Godage, K. (7 மே 2009). "Dr. Wijeweera’s constructive response to Manohara De Silva". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002404/http://www.island.lk/2009/05/07/features4.html.
- ↑ 11.0 11.1 "Result of Parliamentary General Election 1952". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1952.pdf.
- ↑ 12.0 12.1 "New Law Reports: K. K. N. M. Punchi Banda, Petitioner, and K. M. P. Rajaratne, Respondent". LawNet. http://www.lawnet.lk/docs/case_law/nlr/common/html/NLR58V150.htm.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 13.0 13.1 "Result of Parliamentary General Election 1956". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1956.pdf.
- ↑ Abeygunawardhana, J. (31-08-2008). "Was SWRD the architect of the Sinhala only legislation of 1956?". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306053458/http://www.nation.lk/2008/08/31/letters.htm.
- ↑ Urugodawatte, Savimon (31-07-2007). "Approaching Ethnic Problem as Terrorist is like Catching Cobra by its tail". federalidea.com இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202001938/http://federalidea.com/focus/archives/105.
- ↑ Urugodawatta, Savimon (5-09-2009). "Constitutional amendments and Elections Ordinance". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002845/http://www.island.lk/2009/09/05/features5.html.
- ↑ Sachi Sri Kantha. "A. Amirthalingam’s Historic Speech in the Sri Lankan Parliament". Ilankai Tamil Sangam. http://www.sangam.org/ANALYSIS/Sachi_8_25_03.htm.
- ↑ Jayatilaka, Tissa (14 பிப்ரவரி 2010). "An early voice for integration". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/100214/Plus/plus_22.html.
- ↑ DeVotta, Neil (2004). Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka. இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம். பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8047-4924-8. https://books.google.com/books?id=6RSHzj2EU-cC.
- ↑ A. Jeyaratnam Wilson (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: A Political Biography. C. Hurst & Co.. http://www.noolaham.org/wiki/index.php/S.J.V.Chelvanayakam_and_the_Crisis_of_Sri_Lankan_Tamil_Nationalism,_1947-1977.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (3-10-2006). "Peaceful protests of Tamil Parliamentarians". transcurrents.com இம் மூலத்தில் இருந்து 27-09-2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927205836/http://transcurrents.com/tamiliana/archives/200.
- ↑ "5-06-1956". Peace and Conflict Timeline இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150216151836/http://pact.lk/5-june-1956/.
- ↑ 23.0 23.1 Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention [sic] of Parliament". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
- ↑ Kanapathipillai, Valli (2009). Citizenship and Statelessness in Sri Lanka: The Case of the Tamil Estate Workers. Anthem Press. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84331-791-3. https://books.google.com/books?id=XZgdrEWxpR0C.
- ↑ Smith, Donald Eugene (1966). South Asian Politics and Religion. Princeton University Press. பக். 520. https://books.google.com/books?id=dknWCgAAQBAJ.
- ↑ A. Jeyaratnam Wilson (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: A Political Biography. C. Hurst & Co.. http://www.noolaham.org/wiki/index.php/S.J.V.Chelvanayakam_and_the_Crisis_of_Sri_Lankan_Tamil_Nationalism,_1947-1977.
- ↑ Tarzie Vittachi (1958). Emergency '58 the Story of the Ceylon race Riots. André Deutsch. பக். 55. http://www.noolaham.org/wiki/index.php/Emergency_%2758_the_Story_of_the_Ceylon_race_Riots?uselang=en.
- ↑ Tarzie Vittachi (1958). Emergency '58 the Story of the Ceylon race Riots. André Deutsch. பக். 91. http://www.noolaham.org/wiki/index.php/Emergency_%2758_the_Story_of_the_Ceylon_race_Riots?uselang=en.
- ↑ Rajasingham, K. T.. "Chapter 17: Assassination of Bandaranaike". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924030940/http://www.atimes.com/ind-pak/Cl01Df05.html. பார்த்த நாள்: 2018-09-22.
- ↑ 30.0 30.1 "Result of Parliamentary General Election 1960-03-19". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-03-19.pdf.
- ↑ 31.0 31.1 "Result of Parliamentary General Election 1960-07-20". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-07-20.pdf.
- ↑ 32.0 32.1 "Summary of By-Elections 1947 to 1988". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-by-elections-1956.pdf.
- ↑ 33.0 33.1 "Result of Parliamentary General Election 1965". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1965.pdf.
- ↑ 34.0 34.1 D. B. S. Jeyaraj (14-08-2015). "How a Seven Party National Government was Formed Fifty Years Ago". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/article/how-a-seven-party-national-government-was-formed-fifty-years-ago-83593.html.
- ↑ "Sihala Urumaya national list nominees". தி ஐலண்டு (இலங்கை). 7 November 2001 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202002455/http://www.island.lk/2001/11/07/news09.html.
- ↑ "Results of Parliamentary General Election - 2001". Election Commission of Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-2001.pdf.
- ↑ "In Brief". சண்டே ஒப்சேர்வர். 30 சனவரி 2011. http://archives.sundayobserver.lk/2011/01/30/new50.asp.