குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருக்குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்குரங்கணில்முட்டம் |
பெயர்: | திருக்குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தூசி அருகில் |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வாலீசுவரர், கொய்யாமலை நாதர் |
தாயார்: | இறையார்வளையம்மை |
தல விருட்சம்: | இலந்தை |
தீர்த்தம்: | காக்கை மடு(குளம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
அமைவிடம்
இச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும்.
வழிபட்டோர்
வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வெளி இணைப்புகள்
- தல வரலாறு, சிறப்புகள், அமைவிடம் பரணிடப்பட்டது 2007-10-25 at the வந்தவழி இயந்திரம்
திருக்குரங்கணில்முட்டம் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கச்சிநெறிக்காரைக்காடு |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருமாகறல் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 6 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 238 |