கீழ்-இடையுயிர்
Jump to navigation
Jump to search
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
கீழ்-இடையுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு வகை உயிரொலி ஆகும். இவ்வுயிர் வகையை இடை-திறப்புயிர், அரைத் திறப்புயிர் போன்ற சொற்களாலும் குறிப்பிடுவது உண்டு. இதை ஒலிக்கும்போது நாக்கு, கீழுயிருக்கு உரிய நிலையில் இருந்து இடையுயிருக்கு உரிய திசையில் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி பின்வரும் கீழ்-இடையுயிர்களைக் கொண்டுள்ளது.
- கீழ்-இடை முன் இதழ்விரி உயிர் [ɛ]
- கீழ்-இடை முன் இதழ்குவி உயிர் [œ]
- கீழ்-இடை நடு இதழ்விரி உயிர் [ɜ]
- கீழ்-இடை நடு இதழ்குவி உயிர் [ɞ]
- கீழ்-இடை பின் இதழ்விரி உயிர் [ʌ]
- கீழ்-இடை பின் இதழ்குவி உயிர் [ɔ]
தமிழில்
தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.
உசாத்துணைகள்
- கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
- சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.