காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம்
காரைக்குடி சந்திப்பு | |
---|---|
தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | அரியக்குடி சாலை, காரைக்குடி, தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 10°04′04″N 78°47′33″E / 10.0678°N 78.7924°ECoordinates: 10°04′04″N 78°47′33″E / 10.0678°N 78.7924°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | திருவாரூர்-காரைக்குடி முக்கிய வழித்தடம் திருச்சிராப்பள்ளி–மானாமதுரை |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 6 |
இணைப்புக்கள் | வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | KKDI |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | மதுரை |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1 சூலை, 1930 |
மறுநிர்மாணம் | 2008 |
மின்சாரமயம் | ஆம் |
காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Karaikudi Junction railway station, நிலையக் குறியீடு:KKDI) இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி மாநகரில் அமைந்துள்ள ஒரு சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இது திருச்சிராப்பள்ளி - மானாமதுரை வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமாகும்.[1][2][3]இந்த நிலையம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 2.40 கீ மீ தொலைவில் உள்ளது. மற்றும் ராஜாஜி புறநகர் பேருந்து நிலையம் 4.50 கீ மீ தொலைவில் உள்ளது
கண்ணோட்டம்
இந்த நிலையம் 1930-களில் புதுக்கோட்டை - மானாமதுரை சந்திப்புகளுக்கு, இரயில் பாதையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. இது ஒரு சந்திப்பு நிலையமாக இருப்பதால், மூன்று இருப்புப் பாதைகள் நிலையத்திலிருந்து செல்கின்றது, ஒன்று திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கும், இரண்டாவது திருத்துறைப்பூண்டி சந்திப்புக்கும், மூன்றாவது மானாமதுரை சந்திப்புக்கும் செல்கிறது.[4][5][1][6][7]
சேவைகள்
காரைக்குடி தலைநகர் சென்னையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து மானாமதுரை, இராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றுக்கு செல்லும் பெரும்பாலான தொடருந்துகள் இந்த நிலையம் வழியாக செல்கின்றன, ஒவ்வொரு தொடருந்துகளும் இங்கு குறைந்தபட்சம் 5-10 நிமிடங்கள் நிறுத்தப்படும். செட்டிநாடு அதி விரைவு வண்டி பல்லவன் இங்கிருந்துதான் தனது சேவையை தொடர்கிறது.
- மயிலாடுதுறை சந்திப்பை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை - (வழி: பட்டுக்கோட்டை, திருவாரூர்)
- திருச்சிராப்பள்ளி சந்திப்பை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை - (வழி: புதுக்கோட்டை)
- மானாமதுரை சந்திப்பை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை - (வழி: சிவகங்கை)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Nod for rail traffic between Karaikudi and Manamadurai". தி இந்து (சென்னை). 26 June 2008 இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080628141118/http://www.hindu.com/2008/06/26/stories/2008062654650500.htm. பார்த்த நாள்: 27 May 2014.
- ↑ "Karaikudi and Manaparai stations to get ATMs soon". தி இந்து. 3 January 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/karaikudi-and-manaparai-stations-to-get-atms-soon/article1170747.ece. பார்த்த நாள்: 27 May 2014.
- ↑ "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
- ↑ "Broad gauge line inauguration today". தி இந்து. 19 May 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/broad-gauge-line-inauguration-today/article1844391.ece. பார்த்த நாள்: 27 May 2014.
- ↑ R. Rajaram (14 July 2011). "Karaikudi–Tiruvarur section inspected". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/karaikuditiruvarur-section-inspected/article2225694.ece. பார்த்த நாள்: 27 May 2014.
- ↑ "Virudhunagar-Manamadurai BG track to be ready by April". தி இந்து. 17 February 2013. http://www.thehindu.com/todays-paper/virudhunagarmanamadurai-bg-track-to-be-ready-by-april/article4423941.ece. பார்த்த நாள்: 27 May 2014.
- ↑ S. Chidambaram (7 September 2013). "Virudhunagar-Karaikudi passenger service to begin today". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/virudhunagarkaraikudi-passenger-service-to-begin-today/article5103181.ece. பார்த்த நாள்: 27 May 2014.