கள்ளழகர் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கள்ளழகர்
இயக்கம்பாரதி
தயாரிப்புஹென்றி
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
லைலா
ருத்ரா
மணிவண்ணன்
நாசர்
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புபீட்டர் பாப்பையா
வெளியீடுபெப்ரவரி 6, 1999 (1999-02-06)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கள்ளழகர் (Kallazhagar) விஜயகாந்த், லைலா நடிப்பில் இயக்குநர் பாரதி இயக்கத்தில் 1999 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கள்ளழகர். நாசர்,சோனு சூத் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் துணை கதாபாத்திரம் ஏற்றிருக்க, தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். 6 பிப்ரவரி 1999 ல் வெளிவந்த இத்திரைப்படம் சராசரி விமர்சனத்தைப் பெற்றது.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

லைலா மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் பொழுது, கள்ளழகரில் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனாலும் வி.ஐ.பி படத்திலிருந்து நிராகரிக்கப்பட்டது பிரபலமானது.[2] அஜித்குமார் நடித்த உன்னை தேடி படத்திலிருந்தும் நீக்கப்பட்ட பொழுது கள்ளழகர் படம் முதல் படமாக வெளியானது.[3] கேரள மாநிலம் திரிசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட அப்பு என்ற யானை, திரிச்சூர் பூரம் விழாவில் பங்கேற்கும் யானைகளை பராமரிக்கும் இடமான பரமேக்காவு கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டது.[4]

வெளியிடு

இத்திரைப்படம் முதலில் தைப்பொங்கல் நாளான 14 ஜனவரி அன்று வெளியாக திட்டமிட்டு தணிக்கைத் துறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தாமதமானது. இந்திய தணிக்கை துறை இந்தத் திரைப்படத்தை நிராகரித்தது, ஏனென்றால் மதச் சண்டை உண்டாக்கும் சாதகம் இருப்பதாக -ஒரு குறிப்பிட்ட காட்சியில் சில முஸ்லீம் தீவிரவாதிகள் இந்து மத போதகர்களாக வேடமிட்டு திருவிழாக்களில் பங்கேற்பது போல் வருவதால் நிராகரித்தது. பின் படகுழுவினரும் அதை ஏற்றுக்கொண்டதால் ஒரு பகுதி நீக்கபட்டது.[2] இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இதன் தயாரிப்பாளர் ஹென்றி விஜயகாந்தின் அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமிட்டார். லைலாவும் இத்திரைப்படம் முன்னணி கதாநாயகியாக வழிவகுத்து 2000ம் ஆண்டு வெளிவந்த முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பளித்தது.[2] இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் மதுரையில் ஒவ்வொரு ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போதும் நகரம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கள்ளழகர்_(திரைப்படம்)&oldid=31983" இருந்து மீள்விக்கப்பட்டது