கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல்

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறுவோர் பட்டியலை வெளியிட்டது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்[2]

-
வ. எண் ஆண்டு விருது பெற்றவர்கள் நாடு
1 2009 அஸ்கோ பார்ப்போலா பின்லாந்து[1]
2 2010 வீ. எஸ். ராஜம் பென்சில்வேனியா
3 2011 பொன். கோதண்டராமன் தமிழ்நாடு, இந்தியா
4 2012 இ. சுந்தரமூர்த்தி தமிழ்நாடு, இந்தியா.
5 2013 ப. மருதநாயகம் புதுச்சேரி, இந்தியா.
6 2014 கு. மோகனராசு தமிழ்நாடு, இந்தியா.
7 2015 மறைமலை இலக்குவனார் தமிழ்நாடு, இந்தியா.
8 2016 கா. ராஜன் புதுச்சேரி, இந்தியா.
9 2017 உல்ரிக் நிக்லாஸ் ஜெர்மனி
10 2018 ஈரோடு தமிழன்பன் தமிழ்நாடு, இந்தியா.
11 2019 கு. சிவமணி தமிழ்நாடு, இந்தியா.
12 2020 ம. இராசேந்திரன் தமிழ்நாடு, இந்தியா.[3][4]
13 2021 க. நெடுச்செழியன் தமிழ்நாடு, இந்தியா.[4]
14 2022 ழான் லூயிக் செவ்வியார் பிரான்சு [4]

மேற்கோள்கள்