கலி (2016 மலையாளத் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலி
இயக்கம்சமீர் தாகீர்
தயாரிப்புஆசிக் உஸ்மான்
சிஜு காலித்
சமீர் தாகீர்
கதைராஜேஸ் கோபிநாதன்
இசைகோபி சுந்தர்
நடிப்புதுல்கர் சல்மான்
சாய் பல்லவி
ஒளிப்பதிவுகிரீஷ் கங்காதரன்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்ஹேண்ட் மேட் ஃபில்ம்ஸ்
விநியோகம்சென்ட்ரல் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 26, 2016 (2016-03-26)
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கலி(Kali) (Rage) 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சமீர் தாகீர் இணைந்து தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படம் தாகீர் மற்றும் சல்மான் நீலகாசம் பச்சகடல் சுவன்ன பூமி (2013) திரைப்படத்திற்கு அடுத்ததாக இணையும் இரண்டாவது படமாகும்.[3] இத்திரைப்படம் கொச்சி, வாகமண், அதிரப்பள்ளி, மசினகுடி, கூடலூர் (நீலகிரி) ஆகிய இடங்களில் படம் பிடிக்கப்பட்டது. [4]  இத்திரைப்படம் 26 மார்ச் 2016 இல் திரைக்கு வந்தது.[5] இத்திரைப்படம் கன்னடத்தில் கிடி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.[6] இத்திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பில்லகடா என்ற பெயரில் நவம்பர் 2017 இல் வெளியிடப்பட்டது..[7]

கதைக்களம்

சித்தார்த் (துல்கர் சல்மான்) எளிதில் கோபப்படக்கூடிய இளைஞனாவான். தனது கோபத்தை நிர்வகிப்பதில் உள்ள பிரச்சனையின் காரணமாக சில சமயங்களில் சிக்கலில் மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் உண்டு. அனனுக்கு அஞ்சலியுடன் (சாய் பல்லவி) திருமணம் நடைபெறுகிறது. கொச்சியில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறான். அவர்களின் திருமண வாழ்வு சித்தார்த் சின்னச்சின்ன காரணங்களுக்கெல்லாம் சண்டையிடுவதன் காரணமாக அழுத்தம் நிறைந்ததாக மாறுகிறது. அஞ்சலி சித்தார்த்திடம் அவனது பழக்கவழக்கங்களை மெல்ல மெல்ல மாற்றிக்கொள்ள வேண்டுகிறாள். சித்தார்த்தின் சக பணியாளர் அஞ்சலியிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக வெறி கொண்டு தாக்கும் வரை அவர்களின் திருமண வாழ்வு சற்று மென்மையாகப் பயணிக்கிறது.

அஞ்சலி கண்ணீருடன் வீட்டை விட்டுப் புறப்படும் போது சித்தார்த் அவளை தமிழ்நாட்டிலுள்ள மசினகுடியில் உள்ள வீட்டில் விட்டு வருவதற்காக மகிழ்வுந்தில் புறப்படுகிறான்.  வழியில் ஒருசரக்குந்து அவர்களது மகிழ்வுந்தை எந்த வித எச்சரிக்கையுமின்றி முந்திச் செல்ல முயலும் போது சிராய்ப்பு ஏற்படுகிறது. சித்தார்த் சரக்குந்தைத் துரத்திச்சென்று வெற்றிகரமாக முந்திச் செல்கிறான். சாலையில் பெரும் கோபத்துடன் இவ்வாறான நிகழ்வு நடக்க, அஞ்சலி அதை இத்துடன் விட்டு விடக் கெஞ்சுகிறாள். அதற்கு கீழ்படியும் சித்தார்த் பயணத்தைத் தொடர்கிறான். அஞ்சலி அவனது பெருங்கோபத்தைக் கண்டு அஞ்சுவதாகவும், தனது தங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறாள்.

அவர்கள் ஜான் என்ற கொடூரமான தாதா மற்றும் அவனது அடியாட்களால் நடத்தப்படும் சாலையோர உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக இறங்குகிறார்கள். சரக்குந்தின் ஓட்டுநர் சக்கரா ஜானுடைய நண்பனாக இருப்பதைக் கண்டும், தன்னை மீண்டும் சீண்டுவதைக் கண்டும் சித்தார்த் கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்டுப்பாட்டை இழக்கிறான். அஞ்சலி மிகவும் அசௌகரியமாக உணர்கிறாள். அஞ்சலியின் வலியுறுத்தலுக்காக தனது கோபத்தை அடக்கிக் கொள்கிறான். ஜானின் பணியாளான காசாளரிடம் பழச்சாறில் ஈ கிடந்த காரணத்திற்காக பணம் செலுத்த மறுக்கிறான். ஜான் இரண்டு வித வாய்ப்புகளைத் தருகிறான். ஒன்று அனைத்திற்கும் பணம் செலுத்துமாறும், இல்லாவிடில் அனைத்திற்கும் பணம் செலுத்தாமல் சென்று விடுமாறும் கூறுகிறான். சித்தார்த் தன்னிடமும் அஞ்சலியிடமும் சாப்பிட்டதற்கு பணம் இல்லையென்பதை அறிந்து பயப்படுகிறான். பணத்தை எடுத்து வர அஞ்சலியை அனுப்புகிறான். அதுவரை தான் ஜான் வசம் இருப்பதாக ஒப்புக்கொள்கிறான். ஜானின் நண்பன் சக்கரா அஞ்சலியைப் பின் தொடர்ந்து செல்கிறான்.

அஞ்சலி பணம் எடுக்கச் செல்லும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் பணம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து பயணிக்கிறாள். சித்தார்த்தை தொடர்பு கொள்ள முயலும் போது தொலைபேசி சமிக்ஞைகள் கிடைக்காமல் போகிறது. ஒரு வளைவொன்றில் சக்கரா அஞ்சலியை மடக்கிப் பிடித்து வன்கலவி செய்ய முயற்சிக்கிறான். அப்போது அந்த வழியாக வரும் மற்றொரு சரக்குந்து ஓட்டுநர் காவல் துறை உதவியுடன் அஞ்சலியைக் காப்பாற்றுகிறார். இதற்கிடையில், சித்தார்த் ஜானின் கடையில் வேலை செய்யும் பையனின் உதவியுடன் தப்பிக்க முயற்சிக்கிறான். அஞ்சலி திரும்பி வரும்போது ஜான் தாக்கப்பட்டு காயங்களுடன் கிடக்கிறான். சித்தார்த் கையில் கத்தியுடன் நிற்கிறான். காவலர்கள் ஜான் மரணமடைந்தால் சித்தார்த் தண்டனையிலிருந்து தப்ப இயலாது என்கின்றனர். ஆனால், ஜான் தன்னைக் கொலை செய்ய முயற்சித்தது சித்தார்த் இல்லை எனவும், தான் நடத்தி வந்த கடையின் முந்தைய உரிமையாளர் (யாரிடமிருந்து கடையை அராஜகத்தால் கைப்பற்றினானோ அவர்) தான் தன்னைத் தாக்கியதாகத் தெரிவிக்கிறார். இதனால், சித்தார்த் குற்றமற்றவனாக அறியப்பட, சித்தார்த்தும், அஞ்சலியும் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர். வழியில் சக்கரா தனது சரக்குந்து நிலைகுலைந்து போன நிலையில் கிடக்கிறான். சித்தார்த் தனது கோபத்தை அடக்குவதற்கான வாய்ப்பாக இதைக் கருதி அவனை மன்னித்து விடலாம் என்கிறான். ஆனால், அஞ்சலி அவனை மன்னிக்க இயலாதெனவும் சித்தார்த் தனது கோபத்தை வெளிப்படுத்தலாம் எனவும் கூற, சித்தார்த் சக்கராவை கோபத்தோடு தாக்குகிறான்.

இசை

இத்திரைப்படத்திற்கு இசை கோபி சுந்தரால் ஆக்கப்பட்டுள்ளது. பாடல்கள் 2016 மார்ச் 11 ஆம் நாள் சத்யம் ஆடியோசால் வெளியிடப்பட்டது.[8] 2015 இல் வெளியான திரைப்படமான ”தி மேன் ஃப்ரம் U.N.C.L.E” என்ற படத்தின் பாடலான "டேக் யு டவ்ன்" மூல இசையமைப்பாளரான டேனியல் பெம்பெர்டனுக்கு நன்றியறிவிப்புக் கூட இல்லாமல் கலி படத்தின் முன்னோட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.[9][10]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சில்லு ராந்தல்"  ஜாப் குரியன் 5:03
2. "வார்த்திங்களீ"  திவ்யா எஸ். மேனன் 4:33

மேற்கோள்கள்

  1. Akhila Menon (23 December 2015). "Dulquer Salmaan-Sai Pallavi Starrer Titled 'Kali'". http://www.filmibeat.com/malayalam/news/2015/dulquer-salmaan-sai-pallavi-movie-kali-209454.html. 
  2. "Malayalam movie starring Dulquer Salmaan and Sai Pallavi is titled as 'Kali'" இம் மூலத்தில் இருந்து 2016-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160531173214/http://www.lehren.com/news/malayalam/latest-news/malayalam-movie-starring-dulquer-salmaanand-sai-pallavi-titled-kali. 
  3. Anu James (16 November 2015). "Shooting of Dulquer Salmaan-Sai Pallavi's upcoming Sameer Thahir film begins". http://m.ibtimes.co.in/shooting-dulquer-salmaan-sai-pallavis-upcoming-sameer-thahir-film-begins-655005. 
  4. Sachin Jose (21 October 2015). "Sai Pallavi aka Malar to play lead opposite Dulquer Salmaan in Sameer Thahir film". http://m.ibtimes.co.in/sai-pallavi-aka-malar-play-lead-opposite-dulquer-salmaan-sameer-thahir-film-651367. 
  5. Anu James (29 January 2016). "Dulquer Salmaan-Sai Pallavi's 'Kali' to be released in March". http://m.ibtimes.co.in/dulquer-salmaan-sai-pallavis-kali-be-released-march-664938. 
  6. http://www.thenewsminute.com/article/kidi-kannada-remake-dulquer-s-kali-65957
  7. "Sekhar Kammula releases logo of Dulquer Sai Pallavi Hey Pillagada - Telugu Movie News - IndiaGlitz". IndiaGlitz.com. http://www.indiaglitz.com/sekhar-kammula-releases-logo-of-dulquer-sai-pallavi-hey-pillagada-telugu-news-193594. 
  8. Anu, James (11 March 2016). "Listen to songs of Dulquer Salmaan-Sai Pallavi's 'Kali' [AUDIO"]. IB Times. http://www.ibtimes.co.in/listen-songs-dulquer-salmaan-sai-pallavis-kali-audio-670265. பார்த்த நாள்: 25 August 2016. 
  9. Sanjith, Sidhardhan (17 March 2016). "Kali trailer uses Hollywood flick's OST". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Kali-trailer-uses-Hollywood-flicks-OST/articleshow/51426492.cms. பார்த்த நாள்: 25 August 2016. 
  10. "Gopi Sunder's devil may care attitude". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 March 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/Gopi-Sunders-devil-may-care-attitude/articleshow/51455479.cms. பார்த்த நாள்: 25 August 2016.