கப்பல் கோவை
Jump to navigation
Jump to search
கப்பல் கோவை நூலைக் கருமாணிக்கன் கப்பல் கோவை எனவும் வழங்குவர்.
கப்பலூர் என்பது ஓர் ஊரின் பெயர்.[1] இவ்வூரில் வாழ்ந்த வள்ளல் கருமாணிக்கன். இந்தக் கருமாணிக்கன் மீது பாடப்பட்ட நூல் கப்பல் கோவை. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கப்பல் கோவை நூலில் 398 பாடல்கள் உள்ளன.[2] இந்த நூலின் காலம் 14ஆம் நூற்றாண்டு.
பொருள்கரப்புப் பாடல்
இதில் உள்ள பொருள்கரப்புப் பாடல் தமிழ் எண் குறியீட்டு எழுத்துகளைக் கூறிக் கருத்தை விளங்க வைக்கிறது.
- பாடல்
ககரம் பிறந்தசொல் வான்கரு மாணிக்கன் கப்பல்வெற்பில்
உகரம் படைத்திருந் தோம்மில்லை யேஉன்னைப் பெற்றபின்பு
வகரம் பிடித்துவந் தாரிலை யேயென்ன மாயம்செய்தாய்
அகர இகரத் தனமாக்கி வைத்த அருமகவே
- பொருள்
- ககரம் பிறந்தசொல் – ஒருசொல் (க – ஒன்று)
- உகரம் படைத்திருந் தோம்மில்லை – இரண்டுபட்டோமில்லை (உ – இரண்டு)
- வகரம் பிடித்துவந் தாரிலை – கால் பிடித்து வருபவர் இல்லை (வ – கால்)
- அகர இகரத் தனமாக்கி – எட்டரை தனம், எட்டும் என் இடுப்பைத் தனமாக்கிய மகன் (அ –எட்டு, இ – அரை)
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ திருச்சி மாவட்டம் துவரை எனப்படும் துவரங்குறிச்சியை அடுத்துள்ள கப்பல் என்னும் மலையைக் கொண்டிருக்கும் ஊர்
- ↑ தமிழ்நாடு அரசாங்க வெளியீடு 1958