கடுவன் இளவெயினனார்
கடிவன் இள எயினனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பரிபாடல் நூலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. எண் 3, 4, ஆகிய இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும், எண் 5 கொண்ட பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன.
- இவரது பாடல்களில் பிற பாடல்களில் காணப்படாத புதிய பழந்தமிழ்ச் சொற்கள் பல காணப்படுகின்றன. அத்துடன் அக்காலத்து நம்பிக்கைக் கதைகளும் உள்ளன.
பாடல் தரும் செய்திகள்
பரிபாடல் 3 திருமால்
94 அடிகள் கொண்ட இந்தப் பாடலைப் பெட்டன் நாகனார் என்பவர் இசை அமைத்துப் பாலையாழ்ப் பண்ணில் பாடிவந்தார்.
'தொண்டு' (ஒன்பது)
'பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு எனத், தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை'
திருமாலைக் காலம் தந்த கடவுள் என்கிறார்.
(தொண்டு + நூறு = தொண்ணுறு) (தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம்)
- பாழ் = 0
- கால் = ¼
- பாகு = ½
- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழ், எட்டு, தொண்டு = 1,2,3,4,5,6,7,8,9
தமிழ்நெறிப் புணர்ச்சியில் சிக்கல் இல்லாத இந்தத் 'தொண்டு' என்னும் எண்ணைத் தொல்காப்பியர் காட்டவில்லை. காரணம் தொல்காப்பியர் இவரது முன்னோர் இலக்கணத்தை வழிமொழிந்து 'தொண்ணூறு', 'தொள்ளாயிரம்' ஆகிய தொடர்களுக்குப் புணர்ச்சி விதி கூறியுள்ளார்.
இன்றைய அறிவியல்
- பாழ் = ஒன்றுமில்லா ஊழி
- கால் = பெருவெடிப்புக்குப் பின் 'கால்' என்னும் காற்றாகக் காலோடிப் பரவிய ஊழி
- பாகு = காற்று பாகு போல் திரவமாகிய ஊழி
- ஒன்று = உருவப் பொருளாக ஒன்று திரண்டிருக்கும் ஊழி
இப்படி நான்கு வகையான ஊழி எண்ணங்களாய் இருந்து சொல்லிக் காட்டிக்கொண்டிருக்கிறான்.
பரிபாடல் 4 திருமால்
73 அடிகள் கொண்ட இந்தப் பாடலைப் பெட்டன் நாகனார் என்பவர் இசை அமைத்துப் பாலையாழ்ப் பண்ணில் பாடிவந்தார். திருமாலின் புகழ் பாடும் பாடல் இது. இதில் கூறப்பட்டுள்ள உவமைகள் நயமாக உள்ளன.
நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள
நின், நாற்றமும் வண்மையும் பூவை உள
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள
நின், உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள
மருத்து = chemical change
மருத்து = chemical change ஒன்று மற்றொன்றாக மருவுதல் 'மருத்து'
பரிபாடல் 5 செவ்வேள்
81 அடிகள் கொண்ட இந்தப் பாடலைக் கண்ணன் நாகனார் என்பவர் இசை அமைத்துப் பாலையாழ்ப் பண்ணில் பாடிவந்தார். முருகப் பெருமானின் பெருமைகள் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.
- இப்பாடல் நாவலந் தண்பொழில் என்னும் சொல்லால் தமிழ் நாட்டைக் குறிப்பிடுகிறது. 'நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகு பெயரிய குன்றத்தை' (கிரவுஞ்ச மலையை) முருகன் உடைத்தான் என்று இப்பாடல் கூறும் பகுதியால் இதனை உணர முடிகிறது. குருகு மலை தமிழகத்தில் வடபால் இருந்ததோர் மலை. வம்ப மோரியர் தேரில் வந்தபோது தேராழி வழி அமைத்துத் தந்த பாதையைச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன