கடவுனு பொறந்துவ
கடவுனு பொறந்துவ | |
---|---|
ஒரு காட்சியில் ருக்மணி தேவி | |
இயக்கம் | யோதிஷ் சிங் |
தயாரிப்பு | எஸ். எம். நாயகம் சித்திரலேகா மூவிடோன் லிமிட். |
இசை | ஆர். நாராயண ஐயர் |
நடிப்பு | ருக்மணி தேவி, பி. ஏ. டபிள்யூ. ஜயமான, பீட்டர் பீரிஸ், மிரியாம் ஜெயமான, ஊகோ பெர்னாண்டோ, ஸ்டான்லி மல்லவராச்சி, எடி ஜெயமான, ஜெமினி காந்தா, டிமோத்தியசு பெரேரா, ஜே. பி. பெரேரா, ரூபா தேவி |
ஒளிப்பதிவு | கே. பிரபாகர் |
படத்தொகுப்பு | பக்கீர் சாலி |
விநியோகம் | மினெர்வா குரூப் |
வெளியீடு | சனவரி 21, 1947 |
நாடு | இலங்கை |
மொழி | சிங்களம் |
கடவனு பொறந்துவ (சிங்களம்: කඩවුනු පොරොන්දුව, நிறைவேற்றப்படாத வாக்குறுதி) என்பது இலங்கையின் முதலாவது சிங்களப் பேசும் படமாகும். இத்திரைப்படம் 1947 ஆம் ஆண்டு சனவரி 21 திகதியன்று திரையிடப்பட்டது.
இத்திரைப்படம் இதே பெயரில் மீண்டும் 1982 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இதில் விஜய குமாரதுங்க நடித்திருந்தார்.
தயாரிப்பு, நெறிப்படுத்தல்
‘கடவனு பொறந்துவ’ இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது சிங்களத் திரைப்படமாக இருந்தாலும் அதன் தயாரிப்புக்கு முன்னின்று உழைத்தவர்கள் இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும், இந்தியத் திரைப்படக் கலைஞர்களும் ஆவர். இந்தப் படத்தை எஸ். எம். நாயகம் தயாரிக்க இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சின்ஹா என்பவர் நெறிப்படுத்தியிருந்தார்.
நடிகர்கள்
இந்தப் படத்தில் கதாநாயகனாக பி. ஏ. டபிள்யூ. ஜயமானவும், கதாநாயகியாக ருக்மணி தேவியும் மற்றும் எடி ஜயமான, ஜெமினிகாந்தா, ஹிகோ. பெர்னாண்டோ, பீற்றர் பீரிஸ், ஸ்டன்லி மல்வராச்சி, பேட்டம் பெர்னாண்டோ உட்படப் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
மொகிதீன் பேக் மற்றும் தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்களான ஏ. எம். ராஜா, ஜிக்கி, ஜமுனாராணி, என். சி. கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை ஆர். நாராயண ஐயர் இசையமைத்திருந்தார்.
வெற்றிப்படம்
இத்திரைப்படம் முதன் முதலில் கொழும்பில் கிங்ஸ்லி திரையரங்கில் திரையிடப்பட்டது. 200 நாட்கள் தொடர்ந்தும் திரையிடப்பட்டது. சிங்களத் திரையுலகில் வசூல் சாதனையை படைத்தது.
வெளி இணைப்புகள்
- முதல் சிங்கள பேசும் படத்தின் வயது 64 தினகரன், சனவரி 19, 2011
- Sri Lanka Cinema Database
- தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், இலங்கை பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்