எஸ். எஸ். கொக்கோ
சாண்டோ எஸ். எஸ். கொக்கோ (இறப்பு: 1944) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 1930களிலும் 40களிலும் சாகசக் காட்சிகளில், வாள் சண்டை உட்பட சண்டைக் காட்சிகளிலும் நடித்த ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர்.[1]
எஸ். எஸ். கொக்கோவின் இயற்பெயர் பசுபலேட்டி சிறீராமுலு நாயுடு என்பதாகும்.[2] இவரது தாய்மொழி தெலுங்கு. ஆனாலும் தமிழ் உட்பட பல இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், பர்மிய, சீன, மலேசிய, சிங்கள மொழிகளும் இவருக்குத் தெரிந்திருந்தது.[2] மௌனப் படங்கள் முதல் பின்னர் பேசும் படங்கள் வரை நடித்தவர். பி.ஆர்.லட்சுமிதேவியுடன் டூஃபான் குயின் என்ற இந்திப் படத்திலும் இவர் நடித்திருந்தார்.[3] நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நாடகக் குழு இலங்கைக்கும் சென்று நாடகங்களை நடத்தியுள்ளது.[4]
இவர் நடித்த திரைப்படங்கள்
- மெட்ராஸ் மெயில் (1936)
- பக்கா ரௌடி (1937)
- மின்னல் கொடி (1937)
- மாணிக்கவாசகர் (1939, பாத்திரம்: காளிமுத்து)[5]
- சந்திரகுப்த சாணக்யா (1940)
- சத்யவாணி (1940)
- சதி மகானந்தா (1940)
- துபான் குயின் (இந்தி, தமிழ், 1940)
- வனமோகினி (1941)
- மந்தாரவதி (1941)
- காலேஜ் குமாரி (1942)
இறுதிக் காலம்
எஸ். எஸ். கொக்கோ சென்னையில் மாம்பலம் பாண்டி பஜாரில் ஓர் அறையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். வறுமை, மது போன்றவற்றால் 1944-ஆம் ஆண்டில் மயிலாப்பூர் குளத்தங்கரை ஒன்றில் இவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
- ↑ திரையில் சிரித்து மறைவில் அழுத காமெடியன்கள்![தொடர்பிழந்த இணைப்பு], கலைமாமணி வாமனன்
- ↑ 2.0 2.1 2.2 நட்சத்திரத் தேடல்கள் 35. அறந்தை நாராயணன், தினமணி கதிர், 7 ஏப்ரல் 1985
- ↑ ஸ்டண்ட் சோமு வரலாறு
- ↑ திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம்
- ↑ எம்.ஜி.ஆர் என்னை ‘ ஆண்டவரே’’ன்னு கூப்பிடுவார்’’ – சி.டி.ராஜகாந்தம்[தொடர்பிழந்த இணைப்பு]