எழுமின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எழுமின் (Ezhumin) என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தென்னிந்திய தற்காப்புக் கலை தொடர்பான திரைப்படமாகும். தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வி.பி. விஜய் திரைப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். வையம் மீடியாசு என்ற அவருடைய சொந்த படநிறுவனமே படத்தை தயாரிக்கவும் செய்தது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் அன்று திரைப்படம் வெளியிடப்பட்டது. இதே நாளில் தெலுங்கு, மலையாளம் என்ற இரண்டு மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.[1][2] படத்தில் விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் கணேசு சந்திரசேகரன் பாடல்களுக்கான இசையையும் சிறீகாந்த் தேவா படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்துள்ளனர்[3][4].

கதை

தற்காப்பு மற்றும் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட கதையை முன்வைத்து திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

  • விசுவநாதனாக நடிகர் விவேக்
  • பாரதியாக நடிகை தேவயானி
  • சுந்தரமாக அழகம்பெருமாள்
  • காவல்துறை அதிகாரியாக பிரேம்
  • பயிற்சியாளராக ராகவன் உமாசிறீனிவாசன்
  • தூதுவாக செல் முருகன்
  • அசயின் தந்தையாக பசங்க சிவக்குமார்
  • அசயின் தாயாக சுபகீதா
  • ஆதிராவின் தாயாக லதா ராவ்
  • கவினின் தந்தையாக போராளி திலீபன்
  • கவினின் தாயாராக ரஞ்சனா சுரேசு
  • சாராவின் தந்தையாக விசய் ஆனந்து
  • சாராவின் தாயாக அகிலா
  • வினீத்தின் தந்தையாக வி.பி. விஜய்
  • வினீத்தின் தாயாக சித்ரா

தயாரிப்பு

படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 அன்று சென்னையில் தொடங்கியது, நடிகர்கள் மற்றும் குழுவினர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து கூடியிருந்தனர். முழு படமும் சென்னைக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டது மற்றும் படத்தின் இறுதிக்காட்சி பகுதி ஒமேகா தொழிற்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 அன்று சென்னையில் தொடங்கியது, நடிகர்கள் மற்றும் குழுவினர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து கூடியிருந்தனர். முழு படமும் சென்னைக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டது மற்றும் இறுதிக்காட்சி பகுதி ஒமேகா தொழிற்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பற்ற படுக்கைகள் கூட இல்லாமல் தரை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 60 அடி உயரத்தில் கூரையில் நடந்து செல்வதன் மூலம் போலி நடிகர்கள் இல்லாமல் பல்வேறு ஆபத்தான சண்டைக் காட்சிகளில் ஈடுபாட்டுடன் நடித்தனர். சரியான குத்துகள் அடிகள் என்ற தோரணையை வழங்க தற்காப்புக் கலைகளில் உண்மையான சாம்பியன்களாக இருப்பவர்கள் , திரைப்படத்தில் நடித்துள்ளதால் நிறைய உண்மையான சண்டைக் காட்சிகளை நாம் காணலாம். திரைப்பட விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தற்காப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தற்காப்பு கலை மாணவர்களையும் இணைப்பதில் தயாரிப்பு நிறுவனம் முன்னேறுகிறது. திரைப்படத்தின் முன்காட்சி 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 24 ஆம் நாள் சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே. வி புகைப்பட நிறுவனத்தில் சிலம்பரசன், கார்த்தி, விசால் ஆகிய நடிகர்கள் பங்கேற்புடன் வெளியிடப்பட்டது. இவ்வெளியிடு திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது[5][6]. 2018 ஆ ஆண்டு ஆகத்து மாதத்தில் இசையமைப்பாளர் இமான். இப்பாப் தமிழா ஆதி ஆகிய விருந்தினர்களுடன் கலைவாணர் அரங்கில் பாடல் வெளியீட்டு விழாவும் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தற்காப்பு கலை மாணவர்களையும் ஏ.வி.எம் படப்பிடிப்பு தளத்திற்கு வருமாறு இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார். வருகை தந்திருந்த 1500 மாணவர்களில் ஐந்து குழந்தை சாம்பியன்களை தேர்ந்தெடுத்தார். அவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டுமென இவர்களை படத்தில் நடிக்க வைத்தார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் இப்போதெல்லாம் மலிந்து இருப்பதால் தற்காப்பு குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கம் இயக்குநருக்கு ஒரு வலுவான பிடிப்பாக அமைந்தது.

விசுவநாதன் கதாபாத்திரத்தில் நடிக்க விவேக்கை சமாதானப்படுத்துவதில் இயக்குனர் வெற்றி பெற்றார், அதே நேரத்தில் முன்னணி கதாநாயகியான தேவயானியை முதல் முறையாக விவேக்கின் மனைவி பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அவர்களின் கதாபாத்திரம் அவர்களின் மகன் அர்ச்சுனுக்காக வாழும் ஒரு பணக்கார குடும்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழகம் பெருமாள் எதிர்மறை நிழல் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.

விமர்சனங்கள்

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத குழந்தைகளுக்கான ஒரு சுத்தமான திரைப்படம் என்று டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் நேர்மறையான விமர்சனங்களை கொடுத்தது[7]. ஒட்டுமொத்தமாக, எங்கள் குழந்தைகள் ஒரு மேடை நாடகத்தில் நடிப்பது போல இருந்தது என்று இந்தியன் எக்சுபிரசு நாளிதழ் எழுதியது[8]. கதை குறைபாடற்றது என்றாலும் நடிப்பு உலகத் தரம் வாய்ந்ததாக இல்லை என்றாலும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறோம் என்றும் அவ்விதழ் மேலும் கூறியது. திரைப்படம், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து சில பொருத்தமான ஆலோசனைகளை வழங்கினாலும், சில சமயங்களில் அது மிகவும் பிரசங்கமாக இருக்கிறது என்று டைம்சு ஆப் இந்தியா விமர்சனம் வழங்கியது[9].

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எழுமின்&oldid=31339" இருந்து மீள்விக்கப்பட்டது