எலகு வி. எலகுப்பிள்ளை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எலகு வி. எலகுப்பிள்ளை Elagu V. Elaguppillai |
---|---|
பிறந்தஇடம் | இலங்கை |
பணி | தொழிலதிபர், அணு விஞ்ஞானி |
தேசியம் | கனடா |
எலகு வி. எலகுப்பிள்ளை (Elagu V. Elaguppillai) என்பவர்இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய அணு விஞ்ஞானி, மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
கல்வி
இலங்கையில் பிறந்த இலகுப்பிள்ளை உயர்நிலைப் பள்ளிக் கல்வியை வடக்கு இலங்கையில் பெற்றார். இவர் தனது பி.எஸ்சி. பட்டத்தினை கொழும்பின் இலங்கை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு மதிப்பெண்ணுடன் பெற்றார். 1964ஆம் ஆண்டிற்கான அறிவியல் பீடத்தில் சிறந்த செயல்திறனுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் கனடாவில் தொராண்டோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் உயர் படிப்பைத் கனடிய காமன்வெல்த் உதவித்தொகையின் மூலம் தொடர்ந்தார். இதற்காக இவர் செப்டம்பர் 1967இல் கனடாவுக்குச் சென்றார். இவர் தனது எம்.எஸ்சி. மற்றும் முனைவர் பட்ட அணு இயற்பியல் ஆய்வினை முறையே 1968 மற்றும் 1970இல் முடித்தார்.
தொழில்
முனைவர் பட்டத்திற்குப் பின்னர், எலகுப்பிள்ளை 1970இல் மலேசியாவின் பினாங்கு பல்கலைக்கழகம் மற்றும் சாம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் குறிப்பிட்ட காலப் பேராசிரியரானார். பின்னர் 1974இல் தொராண்டோ பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். 1992இல் கார்லேடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்குக் கதிர்வீச்சு பாதுகாப்பில் பட்டதாரி படிப்பை உருவாக்கினார்.[1]
எலகுப்பிள்ளை கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தில் (சி.என்.எஸ்.சி) மூத்த அறிவியல் ஆலோசகராகச் சேர்ந்து, 1997இல் ஓய்வு பெறும் வரை இங்கு பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், 1992 முதல் 1996 வரை அணு கதிர்வீச்சின் விளைவுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் அறிவியல் குழுவில் பணியாற்றினார்.[2] "உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அணு அறிவியல் கற்பித்தல்" குறித்து பன்னாட்டு அணுசக்தி முகமையின் (ஐ.ஏ.இ.ஏ) நிபுணர் குழுவிலும் பங்காற்றியுள்ளார்.[3]
ஜூலை 1997இல், ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (IREE) அறிவியல் ஆலோசகராகச் சேர்ந்தார். அதே ஆண்டில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள அணுசக்தி நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர் ஆராய்ச்சி நிதியுதவியுடன் குறைந்த அளவிலான கதிர்வீச்சு ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தை நிறுவினார். மேலும் இதன் இணை இயக்குநரானார், குறைந்த அளவுகளின் அயனியாக்கும் கதிர்வீச்சு விளைவுகள் குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளார்.[4]
பிற செயல்கள்
1998ஆம் ஆண்டில், ஒன்ராறியோவின் மார்க்கமில் இன்னோஃபார்ம் இன்க் என்ற உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் நிறுவனத் தலைவராகவும் தலைமை இயக்க அதிகாரியாகவும் ஆனார். இந்த நிறுவனம் 2004இல் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டது.[5] தொராண்டோவில் முதுகலை மருந்தியல் கல்லூரியான அகாடமி ஆஃப் அப்ளைடு பார்மாசூட்டிகல் சயின்சஸையும் இவர் இணைந்து நிறுவினார். 2001ஆம் ஆண்டில் இவர் மார்க்கமை தளமாகக் கொண்ட மருந்து கனடா பத்திரிகையின் ஆசிரியர் குழு ஆலோசனைக் குழுவின் தலைவரானார்.
எலகுப்பிள்ளை பல ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் ஆய்வு அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகள் மற்றும் பாடப் புத்தகங்களை எழுதியுள்ளார். பல தேசிய மற்றும் பன்னாட்டுக் குழுக்களில் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
எலகுப்பிள்ளை மார்க்கம் நகர வட்டார உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு 16,246 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[6]
மேற்கோள்கள்
- ↑ "Archived copy". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-01-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "UNSCEAR 1996 report". Unscear.org. 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
- ↑ http://unesdoc.unesco.org/images/0013/001337/133723eo.pdf
- ↑ "Dr. Elagu V. Elaguppillai". Aix1.uottawa.ca. Archived from the original on 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
- ↑ "Archived copy". Archived from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2007-01-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]