எருது (சீன சோதிடம்)
எருது சீன சோதிடத்தின் இரண்டாவது குறி ஆகும். 1925, 1937, 1949, 1961, 1973, 1985, 1997, 2009, 2021, 2033 ஆகிய வருடங்கள் எருது வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் உழைப்பாளிகளாகவும், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
பெயர்க்காரணம்
ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளிடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு ஆற்றை கடக்கும் போட்டி வைத்தார். இதில் எலி தந்திரமாக எருதின் முதுகில் மறைந்து கொண்டு சவாரி செய்தது. ஆற்றின் மறு கரையை எருது அடைந்ததும், அதர்க்கு முன்பாகவே எலி கரையில் குதித்து வெற்றி பெற்றது. இதனால் எருது இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டு, இரண்டாவது வருடச்சின்னமானது.
எருது சீன சோதிடத்தின் இரண்டாவது குறியாக வந்ததன் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள்
நேரம் | இரவு 1:00 முதல் 3:00 வரை |
உரிய திசை | வடக்கு, வட கிழக்கு |
உரிய காலங்கள் | குளிர்காலம் (சனவரி) |
நிலையான மூலகம் | நீர் |
யின்-யான் | யின் |
ஒத்துப்போகும் விலங்குகள் | எலி, சேவல், பாம்பு |
ஒத்துப்போகாத விலங்குகள் | புலி, குதிரை, ஆடு |
இராசி அம்சங்கள்
இராசி எண்கள் | 1, 5, 12, 15, 33, 35, 51, 53 |
இராசி நிறம் | மஞ்சள், பச்சை |
இராசிக் கல் | அக்குவா மரின் |
எருது வருட பிரபலங்கள்
- நீலம் சஞ்சீவ ரெட்டி
- லியாண்டர் பயசு
- ரமேசு கிருட்டினன்
- சச்சின் தெண்டுல்கர்
- தினேசு கார்த்திக்
- கோமி சகாங்கிர் பாபா
- கிருத்திக் ரோசன்
- ஐசுவர்யா ராய் பச்சன்
- நெப்போலியன் போனபர்ட்
- வால்ட் டிசுனி
- ரிச்சர்ட் நிக்சன்
- சார்லி சாப்ளின்
எருது வருடத்தில் உதயமான நாடுகள்
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
- Ox compatibility page பரணிடப்பட்டது 2008-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Chinese Zodiac பரணிடப்பட்டது 2008-04-10 at the வந்தவழி இயந்திரம்