உஸ்தாத்
Jump to navigation
Jump to search
உஸ்தாத் (Ustād or Ostād) மிகச்சிறந்த இசுலாமிய இசைக் கலைஞர்களை மரியாதை நிமித்தமாகக் குறிக்கும் பாரசீக மொழிச் சொல் ஆகும். இச்சொல் மேற்கு ஆசியா, நடு ஆசியா, தெற்காசியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் பாரசீக மொழி, அஜர்பெய்ஜானிய மொழி, உருது மொழி, வங்காள மொழி, மராத்தி மொழி, மாலத்தீவு மொழி, பஞ்சாபி மொழி, பஷ்தூ மொழி, துருக்கிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மிகச்சிறந்த இசுலாமியக் இசைக் கலைஞர்களை உஸ்தாத் எனச்சிறப்பிட்டு அழைப்பர். உஸ்தாத் எனும் சொல், மிகசிறந்த இந்து சமயக் கலைஞர்களை பண்டிதர் என அழைப்பதற்கு சமமாகும்.
புகழ் பெற்ற இந்திய உஸ்தாத்கள்
- உஸ்தாத் அல்லா ரக்கா - தபேலா இசைக் கலைஞர்
- உஸ்தாத் அம்ஜத் அலி கான் - சாரோட் இசைக் கலைஞர்
- உஸ்தாத் பிஸ்மில்லா கான் - செனாய் இசைக் கலைஞர்
- உஸ்தாத் விலாயத் கான் - சித்தார் இசைக் கலைஞர்
- உஸ்தாத் சாகித் பர்வேஸ் -சித்தார் இசைக் கலைஞர்
- உஸ்தாத் ரசீத் கான் - இந்துஸ்தானி இன்னிசைப் பாடகர்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் - இந்துஸ்தானி இன்னிசைப் பாடகர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
- Baily, John (2001). "Ustād". The New Grove dictionary of music and musicians (2nd). Ed. Sadie, Stanley. London: Macmillan Publishers. ISBN 0-333-60800-3.
- Platts dictionary பரணிடப்பட்டது 2016-01-18 at the வந்தவழி இயந்திரம்