உற்றான்
உற்றான் | |
---|---|
இயக்கம் | ஓ. இராசகசனி |
தயாரிப்பு | ஓ. இராசகசனி |
கதை | ஓ. இராசகசனி |
இசை | என். ஆர். ரகுநந்தன் |
நடிப்பு | இரோசன் உதயகுமார் இரோசினி கோமாலி பிரியங்கா நாயர் |
ஒளிப்பதிவு | கோலிக் பிரபு |
படத்தொகுப்பு | எஸ். பி. அகமது |
கலையகம் | சாட் சினிமாஸ் |
வெளியீடு | 31 சனவரி 2020 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உற்றான் (Utraan) என்பது இயக்குநர் இராசகசினி இயக்கிய 2020இல் வெளியான தமிழ் மொழிப் படமாகும். இப்படத்தில் புதுமுகம் இரோசன் உதயகுமார், புதுமுகம் இரோசினி கோமாலி, பிரியங்கா நாயர் (ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களுக்கு திரும்பினார்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பு. ரவிசங்கர், மதுசூதன் ராவ், வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் இசையமைப்பை என். ஆர். ரகுநந்தன் மேற்கொண்டிருந்தார்.[1]
சுருக்கம்
உற்றான் படத்தின் கதை இரண்டு கல்லூரி மாணவர்களுடன் தொடங்குகிறது.[2] ஒரு ஆணும் மற்றும் ஒரு பெண்ணும், கல்லூரியில் படிக்கும்போது காதலிக்கிறார்கள். காவல்துறையைச் சேர்ந்த பெண்ணின் தந்தை அடியாட்களின் உதவியுடன் அவர்களைப் பிரிக்க முயற்சிக்கிறார். அவர்கள் தங்கள் உறவை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
- இரோசன் உதயகுமார்
- இரோசினி கோமாலி
- கமலியாக பிரியங்கா நாயர்
- பு. ரவிசங்கர்
- காவல் ஆய்வாளராக மதுசூதன் ராவ்
- வேல ராமமூர்த்தி
- அறிவுடைநம்பியாக புளோரன்ட் பெரைரா
- இமான் அண்ணாச்சி
- தேனீர் கடை உரிமையாளராக கோதண்டம்
- ஜாங்கிரி மதுமிதா
- கானா சுதாகர்
- சுலக்சணா
- காவல் அதிகாரியாக சூப்பர்குட் சுப்ரமணி
- தவசி
- சரவண சக்தி
- சேரன் ராஜ்
- காதல் சரவணன்
- அங்காடித் தெரு சிந்து
- வழக்கறிஞராக போராளி திலீபன்
- பிரேமபிரியா
- ஆரு பாலா
தயாரிப்பு
பலகுரலுக்கு பெயர் பெற்ற இரோசினி கோமாலி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் ஒரு காவல் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். மதுசூதன் ராவ் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் எதிர்மறை வேடங்களில் நடித்திருந்தனர். பு. ரவிசங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.[3] வெயில் படத்தில் நடித்திருந்த பிரியங்கா நாயர் இப்படத்தில் கல்லூரி விரிவுரையாளராக நடித்திருந்தார்.[4] பாடகர் கானா சுதாகர் இப்படத்தில் துணை வேடத்தில் தோன்றினார்.
வெளியீடு
இரோசன் உதயகுமார் மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோரின் நடிப்பை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியது.[5] மாலை மலரும், தினத்தந்தியும் பாடல்களையும் ஒளிப்பதிவையும் பாராட்டியது.[6][7]
மேற்கோள்கள்
- ↑ https://www.jiosaavn.com/album/utraan/ol-ZyHcVGa4_
- ↑ "'Utraan' is a love story with a twist - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/utraan-is-a-love-story-with-a-twist/articleshow/69308504.cms.
- ↑ Subramanian, Anupama (8 May 2019). "Heroshini Komali debuts in Tamil". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/080519/heroshini-komali-debuts-in-tamil.html.
- ↑ Kumar, P. K. Ajith (27 August 2019). "Priyanka excited about her new innings in Tamil". https://www.thehindu.com/entertainment/movies/priyanka-excited-about-her-new-innings-in-tamil/article29269905.ece.
- ↑ "Utraan Movie Review: Wafer-thin plot is made worse by weak screenplay, unpleasant characters and a bizarre climax.". 31 January 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/utraan/movie-review/73792056.cms. பார்த்த நாள்: 18 August 2020.
- ↑ https://cinema.maalaimalar.com/cinema/review/2020/01/31120505/1283639/Utraan-movie-review-in-tamil.vpf
- ↑ https://www.dailythanthi.com/Cinema/Review/2020/01/31223600/Utraan-in-cinema-review.vpf