உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் | |
---|---|
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | ஜி. டீ. ரமேஷ் |
கதை | குரு தனபால் |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | குரு தனபால் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
கலையகம் | ஸ்ரீ பத்மாவதி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1992 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன் (unna nenachen paattu padichen) என்பது 1992 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். குரு தனபால் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் கார்த்திக், சசிகலா மற்றும் மோனிசா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஜீ. டி. ரமேஷ் தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஏப்ரல் 12 , 1992இல் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "என்னைத்தொட்டு அள்ளி கொண்டது பலராலும் ரசிக்கப்பட்டது.[1][2][3]
கதைச்சுருக்கம்
முத்தரசு (கார்த்திக்) மற்றும் பெரியசாமி (நிழல்கள் ரவி) இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அவர்களுடைய தந்தை (வினுச்சக்கரவர்தி) மற்றும் பாட்டியுடன் (காந்திமதி) வசித்து வந்தனர். மீனாட்சி (சசிகலா) முத்துராசுவின் முறைப்பெண். ஆனால் அவளுக்கு வேறொரு ஆணுடன் (ஆனந்தராஜ்) திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவள் முத்தரசு அல்லது பெரியசாமி இருவரில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். எனவே இரு சகோதரர்களும் மீனாட்சியை கடத்த திட்டமிடுகின்றனர். ஆனால் கடத்தும் போது பெரியசாமி இறந்து விடுகின்றான்.
இதனால் இரு ஊர்க்காரர்களுக்கிடையிலும் மோதல்கள் உருவாக பஞ்சாயத்து கூட்டப்பட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முற்படுகின்றனர். பஞ்சாயத்தின் போது மீனாட்சி தனது மாமாவின் வீட்டில்தான் தங்குவேன் என்று கூறுகிறாள். ஏனென்றால் மீனாட்சிக்கு அவர்களின் அடியாள் கூட்டத்தை பிடிக்கவில்லை. முத்தரசுவின் தந்தை மீனாட்சிக்கும் முத்தரசுவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கின்றார். ஆனால் முத்தரசுவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன தனத்தின் (மோனிசா) மீதுள்ள காதலை மறக்க முடியவில்லை. இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்
- கார்த்திக் - முத்துராசு
- சசிகலா - மீனாட்சி
- மோனிசா - தனம்
- நிழல்கள் ரவி- பெரியசாமி
- ஆனந்தராஜ்
- ஜனகராஜ்
- ராஜேஷ்
- செந்தில் - குப்புசாமி
- வினுச்சக்கரவர்தி
- விஜயன் - ரத்தினசாமி (மீனாட்சியின் தந்தை)
- காந்திமதி
- பி. ஆர். வரலக்சுமி- சின்ன தாயி (தனத்தின் தாய்)
- விஜய சந்திரிகா - மீனாட்சியின் தாய்
- கோவை சரளா - சாந்தி
- திருப்பூர் ராமசாமி
- ஏ. கே. வீரசாமி - பூசாரி
- கறுப்பு சுப்பையா
- பெரிய கறுப்பு தேவர்
- அழகு
இசை
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் 1992 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்வரிகளை கங்கை அமரன், வாலி, பிறைசூடன், பொன்னடியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[4][5][6]
மேற்கோள்கள்
- ↑ "Unnai Ninaichan Paatu Padichen (1992) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/unnai-ninaichan-paatu-padichen/. பார்த்த நாள்: 2013-04-21.
- ↑ "Unna Nenachen Paattu Padicchen". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2014-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140419013207/http://entertainment.oneindia.in/tamil/movies/unna-nenachen-paattu-padicchen.html. பார்த்த நாள்: 2013-04-21.
- ↑ "Filmography of unnai nenachen pattu padichen". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2013-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929093119/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=unnai%20nenachen%20pattu%20padichen. பார்த்த நாள்: 2013-04-21.
- ↑ "Unnai Nenachen Pattu Padichen - Hummaa". hummaa.com. http://www.hummaa.com/music/album/unnai-nenachen-pattu-padichen/37181. பார்த்த நாள்: 2013-04-20.
- ↑ "Unnai Nenaichen Paatu Padichen Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/album/T0000217.html. பார்த்த நாள்: 2013-04-20.
- ↑ "Download Unnai Ninaichen Paattu Padichen by Ilaiyaraaja with Nokia Music". music.ovi.com. http://music.ovi.com/in/en/pc/Product/Ilaiyaraaja/Unnai-Ninaichen-Paattu-Padichen/25223884. பார்த்த நாள்: 2013-04-20.[தொடர்பிழந்த இணைப்பு]