உன்னாலே உன்னாலே
Jump to navigation
Jump to search
உன்னாலே உன்னாலே | |
---|---|
இயக்கம் | ஜீவா |
தயாரிப்பு | ஒஸ்கார் ரவிசந்திரன் |
கதை | ஜீவா S.ராமகிருஷ்ணன் |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | வினய் சதா தனிஷா ராஜூ சுந்தரம் |
ஒளிப்பதிவு | ஜீவா |
படத்தொகுப்பு | V.T.விஜயன் |
விநியோகம் | ஒஸ்கார் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 12, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
'உன்னாலே உன்னாலே' 2007 ல் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும்.இத்திரைப்படம் பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் உருவானது.இப் படத்தினில் முக்கிய கதாபாத்திரமாக வினய்(அறிமுகம்),சதா, தனீஷா(அறிமுகம் தமிழில்) நடித்துள்ளனர்.ஏப்ரல் 12, 2007ல் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின முக்கிய பலகாட்சிகள் இந்தியாவிலும்,மெல்பேர்ன்நகரிலும் எடுக்கப்பட்டுள்ளது .
நடிகர்கள்
- வினய் - கார்த்திக்
- சதா - ஜான்சி
- தனீஷா - தீபிகா
- ராஜூ சுந்தரம் - ராஜூ
இசை
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
- ஹலோ மிஸ் இம்சையே - G.V. பிரகாஷ்
- இளமை உல்லாசம் - கிரிஷ்,சாலினி சிங்
- சூன் போனால் - கிரிஷ்,அருண்
- முதல் நாள் - கே கே,மகாலட்சுமி அய்யர்
- உன்னாலே உன்னாலே - கார்த்திக்,கிரிஷ்,ஹரணி
- வைகாசி நிலவே - ஹரிச்சரண்,மதுசீறி
தகவல்கள்
- அறிமுக நடிகை தனீஷா பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ஆவார்
- 2007 தமிழ் புத்தாண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்குள் வணிகவெற்றி பெற்ற படங்களுல் ஒன்றாகும்.
- ஆரம்பத்தில் யூலை காற்றே என பெயரிடப்பட்ட பொழுதும் பின்னர் தமிழக அரசின் வரிவிலக்கிற்காக உன்னாலே உன்னாலே என பெயர் மாற்றம் பெற்றது. .
வெளி இணைப்பு
- உன்னாலே உன்னாலே பட காட்சிகள் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- உன்னாலே உன்னாலே பாடல்கள் பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்