உத்தரா உன்னி
உத்தரா உன்னி | |
---|---|
வௌவால் பசங்க படபிடிப்பின்போது உத்தரா | |
பிறப்பு | 14-10-1992 திருவல்லா, கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | பரதநாட்டிய நடனக் கலைஞர் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012–2018 |
பெற்றோர் | ஏ. இராமுன்னி ஊர்மிளா உன்னி |
வலைத்தளம் | |
www |
உத்தரா உன்னி (Utthara Unni) கேரளாவைச் சேர்ந்த பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். இவர் சில குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை நிகழ்படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு நடிகையும் ஆவார்.[1] முக்கியமாக தமிழ் , மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் "கோவில் படிகள்" (Temple Steps)[2] என்ற நடன நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
தொழில்
ஒரு நடனக் கலைஞராக
சிதம்பரம், கும்பகோணம், திருநள்ளாறு, நாகப்பட்டினம், மாயவரம், திருவாரூர் , தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற நாட்டியஞ்சலி விழாக்களில் இவர் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது சில மேடைகளில் சூரிய நடன விழா - பாரம்பரியம்,[3] மயிலாப்பூர் நுண்கலை சபை - சென்னை, சங்கீத நாடக அகாதமி - திருச்சூர், நிஷாகந்தி - திருவனந்தபுரம், எர்ணாகுளம் சிவன் கோவில், குருவாயூர், மூகாம்பிகை கோவில், வைலோப்பிள்ளி சமசுகிருதி பவன் - திருவனந்தபுரம் போன்றவை அடங்கும். இவர், நேபாளம், தாய்லாந்து, யுஏஇ, அபுதாபி, ஷார்ஜா, பஹ்ரைன் , குவைத் போன்ற பிற நாடுகளிலும் தனி நடன நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.[4][5]
இவர் கொச்சினில் அமைந்துள்ள "கோவில் படிகள்" என்ற நடனப் பள்ளியின் இயக்குநராகவும் உள்ளார்,[6][7] அவர் யுனெஸ்கோ சர்வதேச நடனக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[8]
சொந்த வாழ்க்கை
உத்தரா மலையாள நடிகை ஊர்மிளா உன்னி - தொழிலதிபர் நிதேஷ் எஸ் நாயர் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.[9]
சான்றுகள்
- ↑ "Uthara Unni-Picture Gallery". manoramaonline. http://origin-english.manoramaonline.com/cgi-bin/MMONline.dll/portal/ep/common/pictureGalleryPopup.jsp?picGallery=%2FMM+Photo+Galleries%2FMovies%2FUthara+Unni&BV_ID=@@@.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Utthara Unni heads Dance Academy". indiaglitz. 5 March 2015 இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150729122536/http://www.indiaglitz.com/utthara-unni-heads-dance-academy-malayalam-news-127082.html.
- ↑ "When Uthara Unni became a 'viraha nayika'". The Times of India. n.d.. https://timesofindia.indiatimes.com/city/kochi/when-uthara-unni-became-a-viraha-nayika/articleshow/66591827.cms.
- ↑ "Uthara Unni: A dancer extraordinaire". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2017/may/07/uthara-unni-a-dancer-extraordinaire-1602237.html.
- ↑ "Actress Utthara Unni's Bharathanatyam Recital Event | RITZ". RITZ Magazine. 11 November 2016. http://www.ritzmagazine.in/actress-utthara-unnis-bharathanatyam-recital-event/.
- ↑ Maattumantha, MS Das (16 March 2015). "ബഹറിനിൽ ഊർമിള ഉണ്ണിയും ഉത്തര ഉണ്ണിയും ഡാൻസ് സ്കൂൾ തുടങ്ങി". மங்களம் பப்ளிகேஷன்ஸ். pp. 42, 43, 44, 45 இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005193706/http://www.cinemamangalam.net/index.php/en/home/index/183/42.
- ↑ "Utthara Unni heads Dance Academy". indiaglitz. 5 March 2015 இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150729122536/http://www.indiaglitz.com/utthara-unni-heads-dance-academy-malayalam-news-127082.html."Utthara Unni heads Dance Academy" பரணிடப்பட்டது 2015-07-29 at the வந்தவழி இயந்திரம். indiaglitz. 5 March 2015. Retrieved 10 May 2015.
- ↑ "About – Utthara Unni | Official Website" இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180117131136/http://www.uttharaunni.com/about.html.
- ↑ Parvathy S Nayar (17 September 2011). "Urmila Unni gets busy in Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203064008/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-17/news-interviews/30169018_1_malayalam-film-tamil-film-mollywood.