உதயணன் வாசவதத்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உதயணன் வாசவதத்தா
இயக்கம்டி. ஆர். ரகுநாத்[1]
தயாரிப்புஆர். எம். ராமனாதன்[1]
கதைஉதயகுமார்
ஏ. எஸ். ஏ. சாமி (வசனம்)[1]
இசைசி. ஆர். சுப்பராமன்[1]
நடிப்புஜி. என். பாலசுப்பிரமணியம்
வசுந்தரா தேவி
எம். எஸ். சரோஜா
டி. பாலசுப்பிரமணியம்
கே. சாரங்கபாணி
காளி என். ரத்னம்
ஒளிப்பதிவுமார்கஸ் பர்ட்லே[2]
படத்தொகுப்புஏ. காசிலிங்கம்
எஸ். ஏ. முருகேசன்[1]
கலையகம்உமா பிக்சர்ஸ்
விநியோகம்உமா பிக்சர்ஸ்[1]
வெளியீடு21 சூன் 1947 (1947-06-21)(India)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உதயணன் வாசவதத்தா (Udayanan Vasavadatta) 1947-ல் தமிழ் மொழியில் வெளிவந்தத் திரைப்பட்மாகும். இயக்குநர் டி. ஆர். ரகுநாத் இதை இயக்கியுள்ளார் இப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், வசுந்தரா தேவி எம். எஸ். சரோஜா ஆகியோர் முன்னனி பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி மற்றும் காளி என். ரத்னம் உடன் தோன்றியுள்ளார்கள்.[2]

கதை

வத்ச நாட்டு ராஜா உதயணன் (ஜி. என். பாலசுப்பிரமணியம்) வாசவதத்தையை (வசுந்தரா தேவி) கண்டு இருவரும் காதலில் விழுகிறார். உதயணனுக்கு ஒரு தெய்வீக யானையை இந்திரன் பரிசாக அளித்துள்ளார். அவர் செய்த பாவத்தால் அந்த யானை அவரை விட்டு வெளியேறுகிறது. வாசவதத்தையை அவ்வூரிலேயே விட்டுவிட்டு உதயணன் யானையைத் தேடி அலைகிறார். வாசவதத்தை அந்த இராச்சியத்தில் இசையும், நடனமும் கற்றுத்தந்து கொண்டுள்ளார். எதிரி நாட்டு அரசன் இவரையும், யானையையும் சேர்த்து விலைமதிப்பில்லா கற்களை திருடியதாகக் கூறி உதயணனை சிறையில் தள்ளி விடுகிறான். வேறொரு எதிரி நாட்டு இவரது நாட்டின் மீது படையெடுக்கிறான் பல சோதனைகளை கடந்து தனது எதிரிகளை வெற்றி கொண்டு பின்னர் வாசவதத்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.[2]

நடிப்பு

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தகவல் தொகுப்பு மற்றும் தி இந்து நாளேடுகளின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது[1][2]

ஜி. என். பாலசுப்பிரமணியம் - உதயணன்
வசுந்தரா தேவி - வாசவதத்தை
எம். எஸ். சரோஜா
டி. பாலசுப்பிரமணியம்
கே. சாரங்கபாணி
காளி என். ரத்னம்
சி. டி. ராஜகந்தம்
என். கிருஷ்ணமூர்த்தி
பி. எஸ். வீரப்பா
டி. கே. சம்பங்கி
எம். வி. மணி
கொளத்து மணி
டி. டி. அரசு
வி. நடராஜ ஐய்யர்
கே. என் .கமலம்
கே. என் .ராஜம்
என். நாகசுப்ரமண்யம்

தயாரிப்பு

ஆர். எம். ராமனாதன் அவர்கள் உமா பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயரித்துள்ளார். முதலில் தியாகராஜ பாகவதர் உதயணன் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து ஒரு சில காட்சிகளும், பாடல்களும் படமாக்கப்பட்டது. பின்னர் பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, காரணமாக கைவிடப்பட்டார். அவருக்கு பதிலாக ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்தார்.[2]

ஒளிபதிவை மார்கஸ் பர்ட்லே என்பார் மேற்கொண்டுள்ளார். நடனம் வி. பி. ராமையா பிள்ளை மற்றும் காமினி குமார் சின்ஹா [2]

ஒலித்தொகுப்பு

இதன் இசை சி. ஆர். சுப்பராமன் , பாபநாசம் சிவன் மற்றும் பாடல்களை கம்பதாசன் எழுதியுள்ளனர். ஜி. என். பாலசுப்பிரமணியம் மற்றும் வசுந்தரா தேவி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .[2]

விமர்சனம்

ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பாடல்களும், வசுந்தரா தேவியின் நடனமும் மிகவும் அற்புதமாக இருக்கிறது என தி இந்து நாளேட்டில் ராண்டார் கை எழுதுகிறார்.[2] ஆனால், இப்படம் சரியான வசூலைத் தரவில்லை.[2]

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உதயணன்_வாசவதத்தா&oldid=30998" இருந்து மீள்விக்கப்பட்டது