ஈச்சங்காடு (யாழ்ப்பாணம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈச்சங்காடு இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் அரியாலையில் கிழக்குஅரியாலை வீதியில் அமைந்துள்ள சிறிய பாரம்பரிய கிராமம். இதைச் சுற்றி வயல்வெளியும், மேற்குப்புறமாகக் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவிலும் சித்துப்பாத்தி மயானமும் அமைந்துள்ளது.

இங்கு புராதனமான வயிரவர் கோவில் அமைந்துள்ளது, மிகப்பெரிய ஆலமரம் ஒன்றன் கீழ் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஈச்சங்காடு ஆலடி வயிரவர், கடுக்காயடி வயிரவர், என்று இவ்வயிரவரை அழைப்பதும் உண்டு.

1995 இல் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கையில் இக்கிராமம் சிதைக்கப்பட்டது.