இளங்கோ நாகராஜா
இளங்கோ | |
---|---|
பிறப்பு | 8 திசம்பர் |
தேசியம் | கனடா |
பணி | நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் |
அறியப்படுவது | தாய்மண் |
"தாய்மண் இளங்கோ" என்று அழைக்கப்படும் இளங்கோ நாகராஜா (Elango Nagarajah), என்பவர் தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் ஆவார். இவர் அன்புடன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பளாராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்படத்தில் அருண் விஜய், மீனா, ரம்பா ஆகியோர் நடித்தனர். அப்படமானது 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
பின்னர் இவர் மிக வெற்றிகரமான தமிழ் இசை ஆல்பமான நேசிக்கிறேன் இன் இயக்குனர், நடிகர், பாடலாசிரியராக பணியாற்றினார். அதில் காதல், நாட்டுப்பற்று போன்ற வெவ்வேறு வகையில் ஆறு பாடல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்தார்.
2009 ஆம் ஆண்டில், கனடிய தமிழ் திரைப்படமான என் செல்லமே படத்தை இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்தார். அந்த படத்தின் இரண்டு பாடல்கலையும் எழுதினார். அந்த பாடல்களுக்கு செந்தூரன் இசையமைத்தார். 2007 மே மாதம் வெளியிடப்பட்டு, கனடாவில் பெரும் பாராட்டைப் பெற்றது. எம். ஸ்ரீரங்கன் இயக்கிய கனேடிய தமிழ் திரைப்படமான மதி படத்தின் பாடல்கள் மற்றும் எம். வகீசனின் தமிழ் இசைத் தொகுப்புக்காக வரிகளை எழுதினார்.
இறுதியில் அழகிய பாண்டிபுரம் படத்தின் வழியாக தமிழ் திரையுலகில் நாயகனாக ஆனார். பல வெற்றிகரமான தமிழ் திரைப்பபட இயக்குனர்களுடன் பணியாற்றிய என். ரயன் இப்படத்தை இயக்கினார். மிகவும் பிரபலமான இசை இயக்குனர் பரத்வாஜ் இந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்தார்.
நடிகராக
திரைப்படம் / ஆல்பம் | இயக்குனர் | ஆண்டு |
---|---|---|
அழகிய பாண்டிபுரம் | என். ராயன் | 2014 |
என் செல்லாமே | இளங்கோ நாகராஜா | 2009 |
நேசிக்கிறேன் | இளங்கோ நாகராஜா | 2005 |
பாடலாசிரியராக
பாடல் | ஆல்பம் / திரைப்படம் | இசை |
---|---|---|
அன்பே நீ. . . | நேசிகிறேன் | எஸ். வி. வர்மன் |
கண்ணும் கண்ணும். . . | நேசிக்கிறேன் | ரவீன் |
தமிழினம். . . | நேசிக்கிறேன் | எஸ். வி. வர்மன் |
தாய்மண். . . | நேசிக்கிறேன் | எஸ். வி. வர்மன் |
முத்தல் முத்தலில். . . | நேசிக்கிறேன் | ரவீன் |
என்மன வனதில். . . | நேசிக்கிறேன் | ரவீன் |
உயிரே நீதானே. . . | என் செல்லமே | ஏ. செந்துரான் |
அடி சிறுக்கி. . . | என் செல்லமே | ஏ. செந்துரான் |
ஓ ஜானு. . . | முத்துக்கள் | எம். வகீசன் |
அன்றும் இன்றும். . | முத்துக்கள் | எம். வகீசன் |
காலம் எல்லாம். . . | முத்துக்கள் | எம். வகீசன் |