இறைசைப் புராணம்
Jump to navigation
Jump to search
இறைசைப் புராணம் என்பது ‘இறைவாச நல்லூர்ப் புராணம்’ என்னும் நூற்பெயரின் சுருக்கப் பெயர்.
நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு
- இறைசை என்னும் இறைவாசநல்லூர். இது இக்காலத்தில் எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. [1]
- இது பெண்ணைநாட்டில் உள்ள ஓர் ஊர்.
- சோழகேரளச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரை முதலாம் இராசராசன் இவ்வூருக்குச் சூட்டினான். [2]
- இறையாபுரி, இறைவான்றையூர், அரசவனம் என்னும் பெயர்களும் இவ்வூருக்கு உண்டு.
- ஊர்ப்பாகம் கொண்டருளிய நாயனார் என்பது இவ்வூர் சிவபெருமான் பெயர்.
- கோயிலின் தல மரம் அரசமரம்
- இவ்வூரில் திருச்சாழல் [3] ஓதுவதற்காக விக்கிரம சோழன் நிவந்தம் அளித்துள்ளான் [4]
- செங்கட்சோழன் கட்டிய கோயில் கல்லாகிக் கிடக்கிறது.
- சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் சாசனங்கள் உள்ளன.
கல்வெட்டு
- நூலைத் திருமலை நயினார் சந்திரசேகரர் பாடினார் என்பது கல்வெட்டுக் குறிப்பு. [5]
- இந்த நூலைப் பாடியதற்காக இவருக்குக் கோயிலார் இவ்வூர் ஆனந்தத் தாண்டவன் திருவீதியில் ஒரு வீடு தந்திருக்கிறார்கள். [6]
இறைவாச நல்லூர்த் தலபுராணம் [7]
- நூலை இயற்றியவர் புராணத் திருமலை நாயகர். [8]
- நூல் 8 சருக்கங்களுடன் 376 பாடல்கள் கொண்டது.
நூல் சொல்லும் கதைகள்
- தருமன் வீமன் உடலில் பாதியை இவ்வூரில் புருசாமிருகத்துக்கு வழங்கினான்.
- இராமன் சுக்கிரீவன் நட்பு தோன்றிய இடம்
- ஔவைக்குப் பனந்துண்டம் கனி தந்தது.
- திருநாவுக்கரசர், சுந்தரர் வரலாறுகளோடுத் தொடர்புடையது
- வாளாளர் காரைக்காட்டார் என்னும் கார்காத்த வேளாளர் விளக்கிடு-விழா இங்கு நடைபெறும்.
பாடல்
இவ்வூரில் உழுதுண்டு வாழ்பவர் அனைவர்க்கும் வீடுபேறு கிட்டுமாம்.
- ஆரூரில் பிறந்தோர்கள், அம்பலத்தைக் கண்டோர்கள், அருள் காசிக்கண்
- சீரூர இறந்தோர்கள், கேதாரம் நீராடிச் சிறந்துள்ளோர்கள்,
- பேரூரும் அருணகிரி நினைத்தோர்கள், அரசவனம் பிரியாது அன்பாய்
- ஏரூர இருந்தோர்கள் கதி பெறுவர் என்றுரைத்தான் இகல்வேற் கந்தன்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
அடிக்குறிப்பு
- ↑ கடலூர் மாவட்டம்
- ↑ கி. பி. 987
- ↑ திருவாசகத்தில் உள்ள பதிகம்
- ↑ ஆண்டு 1135 சாசனம்
- ↑ கல்வெட்டு எண் 485, (1938)
- ↑ கல்வெட்டுக் குறிப்பு ஆண்டு 1510 (சகம் 1432)
- ↑ திருவான்மியூர் டாக்டர் சாமிநாதையர் நூல்நிலையம், சாமிநாதையர் பேரன் க. சுப்பிரமணிய ஐயர் பாதுகாப்பில் உள்ள காகித ஏட்டுப் படிவம்
- ↑ ”புராணத் திருமலைநாயகர் அவர்கள் இயற்றிய எலவானாசூர் என வழங்கும் இறைவாச நல்லூர்த் தலபுராணம் திருமுதுகுன்றம் வீரசைவ சுப்பராய தேசிகர் இயற்றிய உரையுடன் கூடியது”- என அந்த ஏட்டுப் படிவத்தில் உள்ளது.