இறுதி பக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இறுதி பக்கம்
இயக்கம்மனோ வி கண்ணதாசன்
தயாரிப்புசிலம்பரசன்
கிருபாகர்
செல்வி வெங்கடாசலம்
கதைமனோ வி கண்ணதாசன்
இசைஎம். எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
நடிப்புஅம்ருதா சீனிவாசன்
ராஜேஷ் பாலச்சந்திரன்
விக்னேஷ் சண்முகம்
ஒளிப்பதிவுபிரவீன் பாலு
படத்தொகுப்புஇராம் பாண்டியன்
கலையகம்இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்எல்பி
வெளியீடுதிசம்பர் 17, 2021 (2021-12-17)
ஓட்டம்95 நிமிடங்கள்
மொழிதமிழ்

இறுதி பக்கம் ( Irudhi Pakkam ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதை மனோ வி கண்ணதாசன் எழுதி இயக்கியிருந்தார். இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் அம்ருதா சீனிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு எம். எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். அதே நேரத்தில் பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இராம் பாண்டியன் படத்தொகுப்பு செய்துள்ளார்.[1]

நடிகர்கள்

  • இயலாக அம்ருதா சீனிவாசன்
  • குமாராக ராஜேஷ் பாலச்சந்திரன்
  • பிரசாந்த் வேடத்தில் விக்னேஷ் சண்முகம்
  • மிதுனாக ஸ்ரீ ராஜ்
  • ஸ்வயம் சித்தா
  • கிஷோர் ராஜ்குமார்

தயாரிப்பு

இத்திரைப்படம் பொறியியலாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறிய மனோ வீ கண்ணதாசனின் அறிமுக இயக்கத்தில் உருவானது. அம்ருதா லிவின் (2017), கள்ளச்சிரிப்பு (2018) போன்ற முந்தைய இணையத் தொடர்களில் இவரது வேலையைப் பார்த்த பிறகு அம்ருதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தானும் ஒரு நாடகக் கலைஞன் என்பதால், கெரில்லா படத் தயாரிப்பின் பாணியில் படமாக்குவது வசதியாக இருக்கும் என்று மனோ உணர்ந்தார். சென்னை 2 சிங்கப்பூர் (2017) படத்தில் நடித்த நாடக நடிகரும், பயிற்சியாளருமான ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், மலையாளப் படமான கியூபன் காலனி (2018) படத்தில் நடித்த ஸ்ரீ ராஜ் ஆகியோரைப் போலவே இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அம்ருதா, நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார் . [3]

வெளியீடு

இப்படம் 17திசம்பர் 2021 அன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த ஒரு விமர்சகர், "உங்களில் உள்ள துப்பறியும் நபரை வெளிபடுத்தக்கூடிய ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்துடன் கூடிய ஒரு நல்ல திரில்லர்" என்று குறிப்பிட்டு ஒரு நேர்மறையான விமர்சனத்தை அளித்தார். [4] இந்தப் படத்தை தமிழ் நாளிதழ்களான தினமலர், மாலைமலர் ஆகியவையும் மதிப்பாய்வு செய்தன. [5] [6]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இறுதி_பக்கம்&oldid=30903" இருந்து மீள்விக்கப்பட்டது