இராசராச விசயம்
Jump to navigation
Jump to search
இராசராச விசயம் என்னும் நூல் தஞ்சை நகரிலிருந்து அரசாண்ட முதலாம் இராசராசன்மீது பாடப்பட்டது. இதனை நாராயணன் பட்டாதித்தன் [1] எனும் புலவர். இந்தப் புலவர் 'சவர்ணன்' என்னும் சாதியினர். சவர்ணன் குலத்தவர்கள் அக்காலத்தில் சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்தனர். [2] புலவர் பட்டாதித்தன் தான் செய்த நூலை விழாக் காலங்களில் படிப்பதற்காக அரசன் இராசேந்திரன் நிலதானம் வழங்கியிருந்தான். திருப்பூந்துருத்தி [3] கோயில் கல்வெட்டு இதனைக் குறிப்பிடுகிறது. அவையில் படிக்கப்பட்டதால் இது தமிழ்நூல். இதில் இராசராசனது வெற்றிச் செயல்கள், வீரம், செங்கோன்மை, கொடை முதலான செய்திகள் இடம் பெற்றிருந்தன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு, 2005,
அடிக்குறிப்பு
- ↑ பட்டு என்பது ஊர். அவ்வூரில் வாழ்ந்தவன் பட்டாதித்தன்
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு, 2005, பக்ககம் 314
- ↑ தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இங்குக் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை அப்பர், அருணகிரி நாதர், இராமலிங்க சுவாமிகள்]] ஆகியோர் பாடியுள்ளனர்.