ஆறாது சினம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆறாது சினம்
இயக்கம்அறிவழகன்
தயாரிப்புஎன். இராமசாமி
கதைஅறிவழகன்
இசைதமன்
நடிப்புஅருள்நிதி
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா தத்தா
ஒளிப்பதிவுஅரவிந்த் சிங்
படத்தொகுப்புராஜேஷ்கண்ணன். எஸ்
கலையகம்ஶ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 26, 2016 (2016-02-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆறாது சினம், ஶ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் தயாரித்து அறிவழகன் எழுதி, இயக்கியக் குற்றம்-பரபரப்புத் தமிழ்த் திரைப்படமாகும். ஜீது ஜோசப்பின் மெமரீஸ் (2013) என்னும் மலையாளப் படத்தின் மறுவுருவாக்கத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]

நடிப்பு

  • அருள்நிதி (அரவிந்த்)
  • ஐஸ்வர்யா ராஜேஷ் (மியா)
  • ஐஸ்வர்யா தத்தா (வர்சா)
  • ராதாரவி (மாவட்ட காவல்துறை அதிகாரி)
  • அனுப்பமக் குமார் (சந்தோஷின் அண்ணன்)
  • கௌரவ் நாராயணன் (பீட்டர்/சந்தோஷ்)
  • துளசி (அரவிந்தின் அம்மா)
  • ஆர். என். ஆர். மனோகர் (அமைச்சர்)
  • ரோபோ சங்கர்
  • சார்லி
  • ரமேஷ் திலக் (மகிழுந்து ஓட்டுபவர்)
  • ஆதிரா
  • தீரத் ரத்தினம் (மாட்டுத்தாவணி சேகர்)

கதைக்களம்

குடும்பத்தை இழந்த வேதனையால் குடிநோயாளியாக மாறிவிட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி). ஒரு தொடர் கொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி ராதாரவி. அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி ஒரு குடிகாரரிடம் ஏன் அந்த வழக்கை ஒப்படைத்தார்? கொலைகாரனை அருள்நிதி எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலை வழக்கு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இல்லையா என்பதுதான் ஆறாது சினம் படத்தின் கதை.

வெளியீடு

'தி இந்து' ஊடகத்தில் இப்படத்திற்கு 5ற்கு 3 எனத் தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 'நீளமான என்கவுன்ட்டர் காட்சி எரிச்சலை ஏற்படுத்தினாலும் அடுத்து வரும் காட்சிகளில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் அறிவழகன்', 'இதுபோன்ற குறைகளை மீறி, அனைத்துத் தரப்பினருக்குமான த்ரில்லர் படமாக ஈர்க்கிறது ஆறாது சினம்' போன்றவை முக்கிய விமர்சனங்கள்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆறாது_சினம்&oldid=30631" இருந்து மீள்விக்கப்பட்டது