அமித் தேவ்
அமித் தேவ் Amit Dave | |
---|---|
பிறப்பு | அகமதாபாது, இந்தியா |
பணி | புகைப்படக் கலைஞர் |
பணியகம் | இராய்ட்டர்சு |
அறியப்படுவது | புகைப்படத்திற்கான 2022 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசு |
வலைத்தளம் | |
www |
அமித் தேவ் (Amit Dave) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயை உள்ளடக்கிய இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படக் குழுவில் அமித் தேவு ஒரு பகுதியாக உள்ளார்.[1]
பிறப்பு
அமித் தேவ் குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதாபாத்து நகரத்தில் பிறந்தார்.[2]
தொழில்
அமித் தேவ் இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் ஆவார்.[3] இந்தியன் எக்சுபிரசு குழுமத்தில் பணிபுரிவதற்கு முன்பு தேவ் மாநில இதழிலும், குசராத்தில் உள்ள உள்ளூர் செய்தித்தாள்களிலும் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார்.[4] 2002 ஆம் ஆண்டு இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் ஆவணப் புகைப்படத்தைத் தவிர, அமித் தேவ் 2001 குசராத்து பூகம்பம், 2002 குசராத்து கலவரங்கள் மற்றும் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் தென்னிந்தியாவில் சுனாமி போன்ற நிகழ்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.[3][5]
விருது
இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மற்றும் விவரம் பற்றிய ஆவணப் புகைப்படங்களுக்காக அத்னான் அபிதி, சன்னா இர்சாத் மட்டூ, தேனிசு சித்திக்கி அமித் தேவ் [6] உள்ளிட்ட குழுவினருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு அளிக்கப்பட்டது. .[7][8]
மேற்கோள்கள்
- ↑ "2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு: டேனிஷ் சித்திக்கி உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு விருது" (in ta). https://www.hindutamil.in/news/india/798096-slain-photojournalist-danish-siddiqui-among-4-indians-honoured-with-pulitzer-prize-for-images-of-covid-toll-in-india.html.
- ↑ Dave, Amit. "Amit Dave" (in en). https://widerimage.reuters.com/photographer/amit-dave.
- ↑ 3.0 3.1 "Ahmedabad Based Photojournalist Amit Dave Wins Pulitzer Prize" (in en-AU). Vibes Of India. 10 May 2022. https://www.vibesofindia.com/ahmedabad-based-photojournalist-amit-dave-wins-pulitzer-prize/.
- ↑ "Reuters photojournalist Amit Dave awarded Pulitzer Prize for his poignant image during Covid-19" (in en-IN). theblunttimes.in. 10 May 2022 இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221122130525/https://theblunttimes.in/national/Reuters-photojournalist-Amit-Dave-awarded-Pulitzer-Prize-fo/cid7367426.htm.
- ↑ "‘When I went out to shoot, I could see people were panicking’" (in en). The Indian Express. 11 May 2022. https://indianexpress.com/article/india/when-i-went-out-to-shoot-i-could-see-people-were-panicking-7910525/.
- ↑ "Kashmiri woman photojournalist Sana Irshad Mattoo wins Pultizer - The Kashmir Monitor" (in en-US). 2022-05-10. https://www.thekashmirmonitor.net/kashmiri-woman-photojournalist-sana-irshad-mattoo-wins-pultizer/.
- ↑ "Pulitzer Prize 2022: Award for Danish Siddiqui, 3 other Indian journalists" (in en). https://www.dnaindia.com/world/report-pulitzer-for-danish-siddiqui-3-other-indian-journalists-adnan-abidi-sanna-irshad-mattoo-amit-dave-covid-deaths-2951883.
- ↑ "Reuters wins Pulitzer Prize for coverage of COVID in India | Reuters.com" (in en). Reuters. https://www.reuters.com/news/picture/reuters-wins-pulitzer-prize-for-coverage-idUSRTS7PTE9.