அத்னான் அபிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்னான் அபிதி
Adnan Abidi
Pulitzer2018-adnan-abidi-20180530-wp.jpg
2018 ஆம் ஆண்டில்
பிறப்புபுது தில்லி
பணிபுகைப்படக் கலைஞர்
பணியகம்இராய்ட்டர்சு
அறியப்படுவதுமும்முறை புலிட்சர் பரிசு வென்றவர்
வலைத்தளம்
adnanabidi.com

அத்னான் அபிதி (Adnan Abidi) இந்தியாவின் புதுதில்லியைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார்.[1] பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயை உள்ளடக்கிய இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படக் குழுவில் அத்னான் அபிதி ஒரு பகுதியாக உள்ளார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு

அத்னான் அபிதி 1997 ஆம் ஆண்டு இருட்டு அறை உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பான்-ஆசியா செய்தி நிறுவனம், இந்தோ புகைப்பட செய்தி நிறுவனம் மற்றும் பிரசு டிரசுட்டு ஆப் இந்தியா ஆகிய செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தார். இறுதியில் இராய்ட்டர்சு நிறுவனத்தில் பகுதிநேர செய்தியாளராகப் பணிபுரியத் தொடங்கினார். பின்னர் இங்கு ஊழியர் பதவி வழங்கப்பட்டது. 1999 இந்தியன் ஏர்லைன்சு விமானம் 814 கடத்தல், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும், 2005 காசுமீர் நிலநடுக்கம், 2011-2012 மாலத்தீவு அரசியல் நெருக்கடி, 2013 ஒடிசா பைலின் புயல், 2015 நேபாள நிலநடுக்கம், தாக்கா தாக்குதல் 2016 உள்ளிட்ட நிகழ்வுகளில் அத்னான் அபிதி சிறப்பாக செயல்பட்டார்.[4][5]

விருது

2017 ஆம் ஆண்டு அபிதி ரோகிங்கியாக்களின் வெளியேற்றத்தை உள்ளடக்கிய புகைப்படத்திற்காக அவரது சக ஊழியர் தேனிசு சித்திக்குடன் சிறப்புப் புகைப்படத்திற்கான புலிட்சர் பரிசை வென்ற முதல் இந்தியர்கள் ஆனார்.[6][7]

2019-20 ஆங்காங்கு போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக 2020 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசை வென்றார்.[3][8]

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மற்றும் விவரம் பற்றிய ஆவணப் புகைபடங்களுக்காக அத்னான் அபிதி, சன்னா இர்சாத் மட்டூ, தேனிசு சித்திக்கி, அமித் தேவ் உள்ளிட்ட குழுவினருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு அளிக்கப்பட்டது.[9][10]

மேற்கோள்கள்

  1. "Adnan Abidi". Reuters - The Wider Image (in English). Archived from the original on 2021-05-31. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  2. "The 2022 Pulitzer Prize Winner in Feature Photography". www.pulitzer.org (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  3. 3.0 3.1 Darrach, Amanda (2021-05-26). ""Photographers are the ones who see everything"". Columbia Journalism Review (in English). Archived from the original on 2021-06-01. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  4. Plaha, Jasjeet (2018-04-29). "Wanted to show the plight of the Rohingyas: Pulitzer-winning photographer Adnan Abidi". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in English). Archived from the original on 2021-06-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  5. "Featured photojournalist: Adnan Abidi" (in en-GB). The Guardian. 2011-10-26 இம் மூலத்தில் இருந்து 2020-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201112023538/http://www.theguardian.com/artanddesign/gallery/2011/oct/26/photojournalist-adnan-abidi. 
  6. "The 2018 Pulitzer Prize Winner in Feature Photography". The Pulitzer Prizes (in English). Archived from the original on 2020-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  7. Raman, Sruthi Ganapathy (2018-04-18). "'Everyone was in pain': Meet the two Indians who won Pulitzers for photographing the Rohingya crisis". Scroll.in (in English). Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  8. "Five Indian photographers make it to Pulitzer winners' list". இந்தியன் எக்சுபிரசு (in English). 2020-05-06. Archived from the original on 2020-06-21. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
  9. "Pulitzer Prize 2022: Award for Danish Siddiqui, 3 other Indian journalists". DNA India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  10. "Reuters wins Pulitzer Prize for coverage of COVID in India | Reuters.com" (in en). Reuters. https://www.reuters.com/news/picture/reuters-wins-pulitzer-prize-for-coverage-idUSRTS7PTE9. 
"https://tamilar.wiki/index.php?title=அத்னான்_அபிதி&oldid=19709" இருந்து மீள்விக்கப்பட்டது