அதிதி ராவ் ஹைதாரி
அதிதி ராவ் ஹைதாரி | |
---|---|
2018 இல் சம்மோகனம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது | |
பிறப்பு | 28 அக்டோபர் 1986 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய தெலுங்கானா), இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004 – தற்போது வரை |
பெற்றோர் | ஈசான் ஹைதாரி வித்யா ராவ் |
வாழ்க்கைத் துணை | சத்யதீப் மிஸ்ரா (2009 - 2013) (மணமுறிவு) |
அதிதி ராவ் ஹைதாரி (Aditi Rao Hydari (பிறப்பு: அக்டோபர் 28, 1986) என்பவர் இந்திய நடிகை, பாடகர் ஆவார். இவர் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் ஐதராபாத்து (இந்தியாவில்) புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவினுடைய பெயர்த்தி ஆவார். இவரின் முதல் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகை விருது (ஸ்கிரீன் விருது) பெற்றார். வணிக ரீதியிலான பல வெற்றிப் படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். இவற்றில் 2011 இல் வெளிவந்த ராக்ஸ்டார் மற்றும் 2013 இல் வெளிவந்த மர்டர் -3, பாஸ், 2016 இல் வாசிர் ஆகியவை அடங்கும். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாறு தொடர்பான பத்மாவத் திரைப்படத்தில் அலாவுதீன் கில்சியின் மனைவியான மெஹ்ருனிசாக் கதாபாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகரீதியிலும் வணிக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தனிப்பட்ட வாழ்க்கை
அதிதி ராவ் ஹைதாரி அக்டோபர் 28, இல் ஐதராபாத்து (இந்தியாவில்) பிறந்தார்.[2] இவரின் தந்தை ஈசான் ஹைதாரி, தாய் வித்யா ராவ் மரபார்ந்த பாடல் பாடுவதில் புகழ்பெற்றவர் ஆவார். இவர் தும்ரி மற்றும் தாத்ரா போன்ற பாடல்களைப் பாடியதன் மூலம் பிரபலமடைந்தார்.[3] இவருடைய தந்தை 2013 இல் இறந்தார். இவர் ஒரு முஸ்லிம், இவரது தாயார் பிறப்பால் ஒரு இந்து சமயத்தைச் சார்ந்தவர். இவர் ஐதராபாத்து- கொங்கண் மண்டலம் பண்பாட்டைச் சேர்ந்தவர்.[4]
இவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர்.[5]. ஐதராபாத்து (இந்தியாவின்) முன்னாள் பிரதமர் அக்பர் ஹைதாரியின் பெயர்த்தி மற்றும் அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சலே அக்பர் ஹைதாரியின் உடன் பிறந்தவரின் மகள் ஆவார்.[6] அதிதி ராவின் தாய்வழிப் பெற்றோர்களின் பெற்றோர்கள் ராஜா ஜே ராமேஷ்வர் ராவ் ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வணபர்தி மாவட்டத்தின் மேலாண்மைக்குழுத் தலைவராக இருந்தவர்.[7] ஆமிர் கான்[8] மனைவி கிரண் ராவ் இவருடைய உறவினர் ஆவார்.[9]
திரைப்படங்கள்
2018
மணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் செக்கச்சிவந்த வானம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பத்மாவத் எனும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படத்தில் மெஹ்ருனிசா கதாபாத்திரத்தில் நடித்தார். தாஸ் தேவ் எனும் இந்திப் படத்தில் சந்தினி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
2017
காற்று வெளியிடை எனும் தமிழ் திரைப்படத்தில் லீலா ஆபிரஹாம் எனும் மருத்துவர் வேடத்தில் நடித்தார். பூமி எனும் இந்தி மொழித் திரைப்படத்தில் பூமி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
2016
இந்த ஆண்டில் இந்தித் திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். வசிர் எனும் திரைப்படத்தில் ருஹானா அலி கதாபாத்திரத்தில் நடித்தார். தெ லெஜன்ட் ஆஃப் மைக்கேல் மிஷ்ரா எனும் படத்தில் வர்சாலி சுக்லா கதாபாத்திரத்தில் நடித்தார்.
சான்றுகள்
- ↑ சட்டர்ஜி, அனாமிகா (6 அக்டோபர் 2017). "Embracing the desi boho". Khaleej Times. https://www.khaleejtimes.com/wknd/interviews/embracing-the-desi-boho. பார்த்த நாள்: 26 பெப்ரவரி 2018.
- ↑ Adivi, Sashidhar (26 November 2017). "I always consider myself a Hyderabadi: Aditi Rao Hydari" (in en). The Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/tollywood/261117/i-always-consider-myself-a-hyderabadi-aditi-rao-hydari.html. பார்த்த நாள்: 3 March 2018.
- ↑ Stephen, Rosella (21 July 2017). "Doing desi-boho like Aditi" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/life-and-style/fashion/doing-desi-boho-like-aditi/article19324058.ece. பார்த்த நாள்: 12 November 2017.
- ↑ Pai, Nithin (27 October 2017). "An actress, a singer and a dancer: Happy birthday to multi-talented Aditi Rao Hydari - NTD India". NTD India. http://mb.ntdin.tv/en/article/english/actress-singer-dancer-happy-birthday-multi-talented-aditi-rao-hydari. பார்த்த நாள்: 21 January 2018.
- ↑ Varma, Shraddha (15 September 2017). "Did You Know These Bollywood Celebrities Had A Royal Lineage?". https://www.idiva.com/news-entertainment/did-you-know-these-bollywood-celebrities-had-a-royal-lineage/17071538. பார்த்த நாள்: 3 December 2017.
- ↑ "I've always struggled with my relationship with my father: Aditi". Times of India. 23 February 2013 இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130228083108/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-23/news-interviews/37242750_1_aditi-rao-hydari-j-rameshwar-rao-sir-akbar-hydari. பார்த்த நாள்: 2 July 2013.
- ↑ "I can speak good hyderabadi hindi: Aditi Rao Hydari". The Times of India. 21 January 2012 இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130710083352/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-21/news-interviews/30647713_1_actress-aditi-rao-hydari-biryani-ali-zafar. பார்த்த நாள்: 29 March 2012.
- ↑ "Aamir Khan and wife Kiran Rao diagnosed with swine flu" (in en). The Deccan Chronicle. 6 August 2017. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/060817/shocking-aamir-khan-and-wife-kiran-rao-diagnosed-with-swine-flu.html. பார்த்த நாள்: 24 November 2017.
- ↑ Drama Queen Filmfare 2 July 2013