அக்னிஸ்நான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்னிஸ்நான் (অগ্নিস্নান)
இயக்கம்பபேந்திர நாத் சய்கியா
சஞ்சீவ் ஹசாரிகா (Assistant)
கவுதம் போரா
தயாரிப்புபபேந்திர நாத் சய்கியா
கதைபபேந்திர நாத் சய்கியா
இசைதருண் கோசுவாமி
நடிப்புஇந்திரா பானியா
கஷ்மீரி பரூவா
சேத்தன தாசு
அஷோக் தேக்கா
மொலோயா கோசுவாமி
அர்ஜுன் குக தாக்கூரியா
அருண் நாத்
பிஜு புக்கான்
ஒளிப்பதிவுகமல் நாயக்
படத்தொகுப்புநிகுஞ்சா பட்டாச்சாரியா
வெளியீடு1985
ஓட்டம்172 மணித்தியாலங்கள்
நாடுஅசாம்,  இந்தியா
மொழிஅசாமியம்

அக்னிஸ்நான், பபேந்திர நாத் சய்கியா என்பவர் இயக்கிய அசாமிய மொழித் திரைப்படம். தீக்குளிப்பு என்பது இத்தலைப்பின் பொருள். இயக்குனரின் அண்டரீப் என்னும் புதினத்தைத் தழுவிய இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் இந்திரா பனியா, கஷ்மீரீ பருவா, சேத்தன தாசு ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

==கதைச் சுருக்கம்== செல்வந்தர் தன் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். முதல் மனைவிக்கும் அவரது மகனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தன் கணவனின் மீது கொண்ட காதலை பொருட்படுத்தாமல், இன்னொரு திருமணம் செய்வதை எண்ணி மனம் நோகிறார் முதல் மனைவி. மனித மனங்களைப் பற்றிய இத்திரைப்படத்தில், மனைவி எப்படி பழி தீர்க்கிறார் என்பதே கதை.

விருதுகள்

  • தேசிய விருது 'சிறந்த திரைக்கதை' - பபேந்திர நாத் சய்கியா - 1985.
  • தேசிய விருது சிறந்த உள்ளூர் திரைப்படம் 'ரஜத் கமல்' - 1985.
  • இந்தியன் பனரோமா இதழுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது
  • நந்தெசு திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டது
  • பியோங்யாங் திரைப்பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது
  • தாக்கா திரைப்பட விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது

மேற்கோள்கள்

  1. "Agnisnaan". http://onlinesivasagar.com/movies/agnisnaan.htm. பார்த்த நாள்: 26 January 2010. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்னிஸ்நான்&oldid=29441" இருந்து மீள்விக்கப்பட்டது