யக்ஞசேனி
| படிமம்:Yajnaseni (novel).jpg ரூபா பப்ளிசரால் 1995 செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பதிப்பு. | |
| நூலாசிரியர் | பிரதிபா ராய் |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | ஒடியா |
| வகை | புதினம் |
| ஊடக வகை | அச்சு |
| விருதுகள் | மூர்த்திதேவி விருது 1991(ஞானபீடத்தால்) சரளா விருது |
யக்ஞசேனி: திரௌபதியின் கதை (Yajnaseni: the story of Draupadi[1]) என்பது 1984 இல் பிரதிபா ராய் எழுதிய ஒடியா மொழி புதினமாகும். இதன் கதை மகாபாரத காவியத்தின் நாயகியான திரௌபதியை மையமாகக் கொண்டதாகும். யக்ஞசேனி என்ற பெயருக்கு நெருப்பிலிருந்து பிறந்தவள் என்று பொருளாகும். இந்தப் புத்தகம் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, அசாமி, பெங்காலி, நேபாளி, ஹங்கேரியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2] இதை தமிழில் இரா. பாலச்சந்திரன் திரௌபதியின் கதை என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
இது நேபாளி மொழியில் சுமன் போக்ரெல் என்பவரால் நாடகமாக எழுதப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]
இந்தப் புதினமானது கிருட்டிணனுக்கு திரௌபதி எழுதும் கடிதம் எழுதுவது போல உருவாக்கபட்டுள்ளது. புதினத்தில் திரௌபதி தன்னை முழுமையாக புரிந்தவராக கிருட்டிணனை மட்டும் நினைக்கிறாள். எனவே அவருக்கு கடிதம் எழுதுகிறாள். இதில் மகாபாரதத்தில் இல்லாத சில கற்பனை நிகழ்வுகளும், பாத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.[3]
விருதுகள்
- சரளா விருது, 1990 [4]
- மூர்த்திதேவி விருது, 1991 [4]
மேற்கோள்கள்
- ↑ WorldCat book listing
- ↑ Jagannathan, Prema. The Mahabharata and Contemporary Indian Novel: Shashi Tharoor, Pratibha Ray, S.l. Bhyrappa. New Delhi: Prestige Books, 2010.
- ↑ நெருப்பில் பிறந்தவள் | நாவல் வாசிகள் 26, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ்திசை 28, செப்டம்பர், 2025
- ↑ 4.0 4.1 "Pratibha Ray elected chairperson of Bharatiya Jnanpith Selection Board". New Indian Express. 9 October 2018.