பலேத்வா
பலேத்வா
ပလက်ဝမြို့ | |
|---|---|
மியான்மர் நாட்டின் சின் மாநிலத்தில் உள்ள பலேத்வா நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 21°18′N 92°51′E / 21.300°N 92.850°E | |
| நாடு | |
| மாநிலம் | சின் மாநிலம் |
| மாவட்டம் | பலேத்வா மாவட்டம் |
| நகராட்சி | பலேத்வா நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,368 sq mi (3,543 km2) |
| மக்கள்தொகை (2024) | 83,905 |
| நேர வலயம் | ஒசநே+6.30 (மியான்மர் நேரம்) |
| தட்ப வெப்பம் | வெப்பமண்டல பருவமழை காலநிலை |
பலேத்வா (Paletwa), பர்மிய மொழி:ပလက်ဝမြိ), மியான்மர் நாட்டின் தூர-மேற்கில் அமைந்த சின் மாநிலத்தின் உள்ள பலேத்வா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மியான்மர்-வங்காளதேசம் எல்லைப்புறத்தில் அமைந்த பலேத்வா நகரம், வங்காளதேச எல்லையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2024ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 83,905 ஆகும்.[1]இந்நகரத்தில் குக்கி மொழி மற்றும் சின் மொழிகள் பேசப்படுகிறது. மியான்மர்-இந்தியா கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்ட நெடுஞ்சாலை இந்நகரத்தை கடந்து செல்கிறது.
2021ஆம் ஆண்டு முதல் நடைபெறும் மியான்மர் உள்நாட்டுப் போரின் போது, 13 நவம்பர் 2023 அன்று அரக்கான் இராணுவம் இந்நகரை மியான்மர் இராணுவத்திடமிருந்து கைப்பற்றியது.[2]