ஆள்கூறுகள்: 21°18′N 92°51′E / 21.300°N 92.850°E / 21.300; 92.850

பலேத்வா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பலேத்வா
ပလက်ဝမြို့
பலேத்வா is located in மியான்மர்
பலேத்வா
பலேத்வா
மியான்மர் நாட்டின் சின் மாநிலத்தில் உள்ள பலேத்வா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°18′N 92°51′E / 21.300°N 92.850°E / 21.300; 92.850
நாடு மியான்மர்
மாநிலம்சின் மாநிலம்
மாவட்டம்பலேத்வா மாவட்டம்
நகராட்சிபலேத்வா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1,368 sq mi (3,543 km2)
மக்கள்தொகை
 (2024)
83,905
நேர வலயம்ஒசநே+6.30 (மியான்மர் நேரம்)
தட்ப வெப்பம்வெப்பமண்டல பருவமழை காலநிலை
கொல்கத்தா-வடகிழக்கு இந்தியாவை மியான்மர் நாட்டின் சிட்டவே துறைமுகம் & கலாதான் ஆறு, பலேத்வா நகரம் வழியாக இணைக்கும் 859 கிலோமீட்டர் நீளம் கொண்ட கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டத்தின் வரைபடம்

பலேத்வா (Paletwa), பர்மிய மொழி:ပလက်ဝမြိ), மியான்மர் நாட்டின் தூர-மேற்கில் அமைந்த சின் மாநிலத்தின் உள்ள பலேத்வா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மியான்மர்-வங்காளதேசம் எல்லைப்புறத்தில் அமைந்த பலேத்வா நகரம், வங்காளதேச எல்லையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2024ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 83,905 ஆகும்.[1]இந்நகரத்தில் குக்கி மொழி மற்றும் சின் மொழிகள் பேசப்படுகிறது. மியான்மர்-இந்தியா கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்ட நெடுஞ்சாலை இந்நகரத்தை கடந்து செல்கிறது.

2021ஆம் ஆண்டு முதல் நடைபெறும் மியான்மர் உள்நாட்டுப் போரின் போது, 13 நவம்பர் 2023 அன்று அரக்கான் இராணுவம் இந்நகரை மியான்மர் இராணுவத்திடமிருந்து கைப்பற்றியது.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://www.mrtv3.net.mm/newpaper/99newsn.pdf[தொடர்பிழந்த இணைப்பு] Page 10 Column 1
  2. "Arakan Army Declares Victory in Paletwa, Myanmar's Chin State".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பலேத்வா&oldid=428136" இலிருந்து மீள்விக்கப்பட்டது