செலோன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:50, 29 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
செலோனின் பொதுவான வேதியியல் கட்டமைப்பு

வேதியியலில் செலோன் (Selone) என்பது கீட்டோனின் கட்டமைப்பை ஒத்த ஒரு கரிம செலீனியம் சேர்மம் ஆகும். கீட்டோன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆக்சிசனை செலீனியம் இடம்பெயர்ச்சி செய்து செலோன் உருவாகிறது. செலீனியம்-77 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியலில் பயன்படும் படியா வகையிடப்பட்ட முகவராக இச்சேர்மம் பயன்படுகிறது[1]. முப்பரிமாணச்சிறப்பு ஆல்டால் வினையில் படியா ஆக்சசோலிடின்செலோன்கள் சிறந்த இணை பங்கேற்பிகளாகத் திகழ்கின்றன. ஆல்டால் விளைபொருளின் ஆடிமாற்றியத் தூய்மையை 77Se அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையின் மூலமாக சரிபார்க்க இயலும்[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=செலோன்&oldid=374317" இலிருந்து மீள்விக்கப்பட்டது