கோல்டான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 05:28, 30 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Added image and caption #app-image-add-top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கொலம்பைட்டு-டாண்ட்டலைட்டு

கோல்டான் (Coltan) என்பது கொலம்பைட்டு-டாண்ட்டலைட்டு ஆகிய கனிமங்களின் கலவை ஆகும். இதிலிருந்து தான் நியோபியம் (முன்னர் கொலம்பியம் என்ற பெயரிடப்பட்டிருந்தது) என்ற தனிமமும் டாண்ட்டலம் என்ற தனிமமும் பிரித்தெடுக்கப் படுகின்றன[1]. கோல்டானிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டாண்ட்டலம் செல்பேசிகள், இறுவட்டு இயக்கிகள், காணொலி விளையாட்டு அமைப்புகள், கணினிகள் ஆகிய மின்னணுவியல் பொருள்களில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் (மின்பகு/ஊசிமுனை) மின்தேக்கிகளைத் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன[2]. காங்கோ மக்களாட்சிக் குடியரசில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மோதல்களுக்குக் காரணமாகவும் அவற்றிற்கு பணமளிக்கும் மூலமாகவும் கோல்டான் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கோ போரில் 1998-இலிருந்து இதுவரை 69 இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புதவி

"https://tamilar.wiki/w/index.php?title=கோல்டான்&oldid=345036" இலிருந்து மீள்விக்கப்பட்டது