ஆள்கூறுகள்: 27°59′N 75°48′E / 27.98°N 75.8°E / 27.98; 75.8

கேத்திரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 04:41, 14 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing The_abondened_khetri_fort,_rajasthan.jpg with File:The_abandoned_Khetri_Fort,_Rajasthan.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error)).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கேத்திரி

mihot

நகரம்
கேத்திரி கோட்டை
கேத்திரி கோட்டை
கேத்திரி is located in இராசத்தான்
கேத்திரி
கேத்திரி
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் கேத்திரி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°59′N 75°48′E / 27.98°N 75.8°E / 27.98; 75.8
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சுன்சுனூ
அரசு
 • நிர்வாகம்கேத்திரி நகராட்சி
ஏற்றம்
484 m (1,588 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்18,209
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, மார்வாரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
333504/333503
தொலைபேசி குறியீடு01593
வாகனப் பதிவுRJ53

கேத்திரி (Khetri), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் வடகிழக்கில் உள்ள செகாவதி பிரதேசத்தில் உள்ள சுன்சுனூ மாவட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். கேத்திரி நகரத்தை இராஜா கேத் சிங் நிறுவினார். கேத்திரி செப்பு கனிமத்திற்கு பெயர் பெற்றது. கேத்திரி நகரம் ஜெய்ப்பூருக்கு வடக்கே 164.1 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லிக்கு தென்மேற்கே 216.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது கேத்திரி சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கேத்திரி மன்னர் அஜித் சிங், விவேகானந்தரின் நண்பராகவும், சீடராகவும் இருந்தார்.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 20 வார்டுகளும், 3,149 வீடுகளும் கொண்ட கேத்திரி நகரத்தின் மக்கள் தொகை 18,209 ஆகும். அதில் 9,451 ஆண்கள் மற்றும் பெண்கள் 8,758 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2347 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,765 மற்றும் 128 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.68%, இசுலாமியர் 10.09% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். [1]

கேத்திரி கோட்டை

கேத்திரி கோட்டை 1754ல் மன்னர் போபால் சிங் செகாவத் என்பவரால் கட்டப்பட்டது.[2]

இதனனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Khetri Population, Religion, Caste, Working Data Jhunjhunun, Rajasthan - Census 2011
  2. Dundlod, Harnath Singh (1970). The Sheikhawats and Their Lands. Jaipur: Raj Educational Printers. p. 122. கணினி நூலகம் 309570.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கேத்திரி&oldid=340133" இலிருந்து மீள்விக்கப்பட்டது