ஒரூஉ

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 05:52, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒரூஉ என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)

சீர்களின் அமைப்பு

செய்யுளின் அடியில் 1 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் ஒரூஉத்தொடை விகற்பம் எனப்படும்.

தொடை விகற்ப வகைகள்

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  1. ஒரூஉ மோனைத் தொடை
  2. ஒரூஉ இயைபுத்தொடை
  3. ஒரூஉ எதுகைத்தொடை
  4. ஒரூஉ முரண் தொடை
  5. ஒரூஉ அளபெடைத்தொடை

எடுத்துக்காட்டுகள்

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்." (435-வது திருக்குறள், பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்)

மேற்கண்ட குறளில் முதலடியில் முதல் மற்றும் நான்காம் சீர்கள் "ர" என்று எதுகையெடுக்கின்றன. எனவே இச்செய்யுள் ஒரூஉ எதுகைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஒரூஉ&oldid=305678" இலிருந்து மீள்விக்கப்பட்டது