அவையகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Semmal50 பயனரால் செய்யப்பட்ட 15:50, 16 செப்டெம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் வாகைத்திணையை விளக்கும்போது நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் [1] என்று சுட்டி, அதனை மேலும் விளக்குகையில் எட்டுவகை நுதலிய அவையகம் [2] எனக் குறிப்பிடுகிறது.

  • இவை 8 வகையான அவையகம்

இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் பிறப்பொழுக்கம், கல்வி, பொது-ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவா-இன்மை என்னும் 8 நெறிகளைக் குறிப்பிடுகிறார். [3]

இவற்றில் பொது-ஒழுக்கத்துக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள்களையும் இளம்பூரணர் காட்டியுள்ளார்.

அரசன் வைத்திருந்த எண்பேராயம் வேறு.
இது மக்களைச் சூழ்ந்திருக்கும் எண்பேராயம்.

காண்க

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் புறத்திணையியல் 16
  2. தொல்காப்பியம் புறத்திணையியல் 17
  3. இதற்கு மேற்கோளாக ஒரு பாடலையும் தருகிறார்.

    குடிப்பிறப்பு உடுத்துப்(1) பனுவல் சூடி(2)
    விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு(3) காமுற
    வாய்மை வாய்மடுத்து மாந்தித்(4) தூய்மையின்
    காதல் இன்பத்துள் தங்கித்(5) தீதறு
    நடுவுநிலைமை நெடுநகர் வைகி(6) வைகலும்
    அழுக்காறு-இன்மை(7) அவா-இன்மை(8) என
    இருபெரு நிதியமும் ஒலுதான் ஈட்டும்
    தோலா நாவின் மேலோர் பேரவை
    உடன் அமர் இருக்கை ஒருநாள் பெறும் எனின்
    பெறுக தில் அம்ம யாமே (...)
    மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே. (ஆசிரியமாலை)

"https://tamilar.wiki/w/index.php?title=அவையகம்&oldid=259295" இலிருந்து மீள்விக்கப்பட்டது