தமிழ்நடை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 08:29, 15 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("தமிழ்நடை என்பது தமிழ் பேசப்படும் முறைமை. இதனை இயல் தமிழ் என்கிறோம். தொல்காப்பியத்தில் உள்ள தொல்காப்பியம் கிளவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தமிழ்நடை என்பது தமிழ் பேசப்படும் முறைமை. இதனை இயல் தமிழ் என்கிறோம். தொல்காப்பியத்தில் உள்ள கிளவியாக்கம் இதனை விரிவாகக் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் இதனை sequence of sentence என்று கூறுவர்.

இயல்பாக எழுவாய் + பயனிலை, எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்னும் வரிசையில் அமையும். இது உரைநடையில் பின்பற்றப்படும் நெறி. பொருளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த வரிசை மாறி அமையினும் பொருளமைதி கெடுவதில்லை. அவன் வந்தான் என்பதை வந்தான் அவன் என்று சொன்னாலும் பொருள் மாறுபடாது.

'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால், [1] என்னும் பாடல் பகுதியில் செய்தி முதன்மை கருதிப் (தோன்றா எழுவாய்) + பயனிலை + செயப்படுபொருள் + மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருள் என்னும் பாங்கில் தமிழ்நடை அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.

பாகுபாடுகள்

தமிழ்நடையில் உரைநடை, பாட்டுநடை என்பன பெரும் பாகுபாடுகள். தொல்காப்பியம் அக்காலத்தில் நிலவிவந்த மேலும் சில மொழிநடை நிலப் பாகுபாடுகளைக் காட்டுகிறது.

அடிக்குறிப்பு

  1. கம்பராமாயணம், சுந்தர காண்டம் திருவடி தொழுத படலம் 25
"https://tamilar.wiki/w/index.php?title=தமிழ்நடை&oldid=103188" இலிருந்து மீள்விக்கப்பட்டது