தமிழ்நடை
தமிழ்நடை என்பது தமிழ் பேசப்படும் முறைமை. இதனை இயல் தமிழ் என்கிறோம். தொல்காப்பியத்தில் உள்ள கிளவியாக்கம் இதனை விரிவாகக் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் இதனை sequence of sentence என்று கூறுவர்.
இயல்பாக எழுவாய் + பயனிலை, எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்னும் வரிசையில் அமையும். இது உரைநடையில் பின்பற்றப்படும் நெறி. பொருளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த வரிசை மாறி அமையினும் பொருளமைதி கெடுவதில்லை. அவன் வந்தான் என்பதை வந்தான் அவன் என்று சொன்னாலும் பொருள் மாறுபடாது.
'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால், [1] என்னும் பாடல் பகுதியில் செய்தி முதன்மை கருதிப் (தோன்றா எழுவாய்) + பயனிலை + செயப்படுபொருள் + மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருள் என்னும் பாங்கில் தமிழ்நடை அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.
பாகுபாடுகள்
தமிழ்நடையில் உரைநடை, பாட்டுநடை என்பன பெரும் பாகுபாடுகள். தொல்காப்பியம் அக்காலத்தில் நிலவிவந்த மேலும் சில மொழிநடை நிலப் பாகுபாடுகளைக் காட்டுகிறது.
அடிக்குறிப்பு
- ↑ கம்பராமாயணம், சுந்தர காண்டம் திருவடி தொழுத படலம் 25