இயக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>NeechalBOT சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு |
imported>Sukanthi "{{Unreferenced}} ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:11, 9 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர்.
அவர்கள்
- மாவன்,
- ஆந்தை,
- அந்துவஞ்சாத்தன்,
- ஆதன் அழிசி,
- இயக்கன் எனப்பட்ட ஐவர்.
சங்கப்பாடல்களில் இயக்கனைப் பற்றியுள்ள குறிப்புகள் பின்வருமாறு:
இவனது பகைவர்கள் உடல் திணவெடுத்து இவனைத் தாக்க வருவதாகச் செய்தி வந்தது. பாண்டியன் வஞ்சினம் பேசுகிறான். அவர்களைப் புறங்காணேன் ஆயின் எனக்கு இன்னது நேரட்டும் என்கிறான். இந்த ஐவரோடும் என் கண் போன்ற நண்பரோடும்,கேளிரோடும் இனிமையாக மகிழ்ந்து திளைத்து இப்போது வாழ்கிறேன். பகைவரைப் புறம் காணாவிட்டால் இந்த மகிழ்வான வாழ்க்கை எனக்கு இல்லாமல் போகட்டும் என்கிறான்.
இயக்கன் 'வெஞ்சின இயக்கன்' எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளான். அதனால் இவன் பூதப்பாண்டியனின் படைத்தலைவனாக விளங்கியவன் எனலாம்.(ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது - புறநானூறு 71)