மாவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர்.

அவர்கள்

  1. மாவன்
  2. ஆந்தை
  3. அந்துவஞ்சாத்தன்
  4. ஆதன் அழிசி
  5. இயக்கன் எனப்பட்ட ஐவர்.

சங்கப்பாடல்களில் மாவனைப் பற்றியுள்ள குறிப்புகள் பின்வருமாறு:

இவனது பகைவர்கள் உடல் திணவெடுத்து இவனைத் தாக்க வருவதாகச் செய்தி வந்தது. பாண்டியன் வஞ்சினம் பேசுகிறான். அவர்களைப் புறங்காணேன் ஆயின் எனக்கு இன்னது நேரட்டும் என்கிறான்.

இந்த ஐவரோடும் என் கண் போன்ற நண்பரோடும்,கேளிரோடும் இனிமையாக மகிழ்ந்து திளைத்து இப்போது வாழ்கிறேன். பகைவரைப் புறம் காணாவிட்டால் இந்த மகிழ்வான வாழ்க்கை எனக்கு இல்லாமல் போகட்டும் என்கிறான்.

மாவன் என்னும் பெயர் குதிரையை உடையவன் என்ற பொருளைத் தருகிறது. எனவே இந்த மாவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் குதிரைப்படைத் தலைவன் எனலாம்.(ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது - புறநானூறு 71)

"https://tamilar.wiki/index.php?title=மாவன்&oldid=42256" இருந்து மீள்விக்கப்பட்டது