ற்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{தமிழ் எழுத்துகள்}} '''ற்''' [[File:ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]] தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>A.Muthamizhrajan |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தமிழ் எழுத்துகள்}} |
{{தமிழ் எழுத்துகள்}} |
||
'''ற்''' |
'''ற்''' ({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}}}) [[தமிழ்|தமிழ் மொழியின்]] [[எழுத்து]]களில் ஒன்று. இது [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] முப்பதாவது எழுத்து. இது [[மொழி]]யின் ஓர்[[ஒலி|ஒலியையும்]], அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "றகர மெய்" அல்லது "றகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இற்றன்னா" வல்லின றகரம் என வழங்குவர். |
||
=="ற்" இன் வகைப்பாடு== |
=="ற்" இன் வகைப்பாடு== |
||
[[Image:Writing Tamil 30.gif|thumb|''ற்'' எழுதும் முறை]] |
|||
| ⚫ | தமிழ் எழுத்துகளில் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''ற்''' மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref> |
||
| ⚫ | |||
| ⚫ | தமிழ் |
||
==இனவெழுத்துகள்== |
|||
| ⚫ | |||
| ⚫ | எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது '''ற்''', '''ன்''' என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் '''ற்''', '''ன்''' இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.<ref>இளவரசு, சோம., 2009. பக். 44, 47</ref>. |
||
==குறிப்புகள்== |
|||
==இனவெழுத்துக்கள்== |
|||
| ⚫ | எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் |
||
==குறிப்புக்கள்== |
|||
{{reflist}} |
{{reflist}} |
||
06:28, 24 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
![]() | |||||
|---|---|---|---|---|---|
| தமிழ் எழுத்துக்கள் | |||||
| அ | ஆ | இ | ஈ | உ | |
| ஊ | எ | ஏ | ஐ | ஒ | |
| ஓ | ஔ | ஃ | |||
| க் | ங் | ச் | ஞ் | ட் | |
| ண் | த் | ந் | ப் | ம் | |
| ய் | ர் | ல் | வ் | ழ் | |
| ள் | ற் | ன் | |||
ற் (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் முப்பதாவது எழுத்து. இது மொழியின் ஓர்ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "றகர மெய்" அல்லது "றகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இற்றன்னா" வல்லின றகரம் என வழங்குவர்.
"ற்" இன் வகைப்பாடு

தமிழ் எழுத்துகளில் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ற் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ற் வல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வன்மையான ஓசை உடையது ஆதலால் வல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
இனவெழுத்துகள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ற், ன் என்னும் இரண்டும் மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்த உருவாவதால் ற், ன் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].
குறிப்புகள்
உசாத்துணைகள்
- இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
- சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
- பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.
- வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
