Tamilar.wiki
புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர் விக்கி, பக்கச்சார்பு அற்றதாகத் தனி நபர்களின் அரசியல், இலக்கிய, நாட்டாமைகளைத் தவிர்த்து, தகுதியானவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க, தனிநபர் முயற்சியிலும், பொருளாதாரத்திலும் உருவாக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் சிலவற்றிற்கு விலக்களிக்க, தமிழில் மேலும் கட்டுரைகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு, விடுபட்ட, விலக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் தகவலுக்காக நோர்வேயில் உருவாக்கப்பட்ட, தகவற் களஞ்சியம் (விக்கி தளம்) இது. இதில் தமிழ் உலகிற்குத் தேவையான கனமான தகவல்களை நேர்த்தியான கட்டுரைகளாகப் பதியலாம். கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் அதிகாரம் தமிழர்விக்கிக்கு உண்டு.
முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும் அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தோன்றியதின் இலக்கிய நாட்டாமையும் அதனோடு சேர்ந்த அலப்பரையும் தாங்க முடியாது இருக்கிறது. இவ்விரண்டின் தகவல் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மேலும் இந்த தளத்தை அபிவிருத்தி செய்ய உங்கள் ஆதவரை நாடுகிறோம். தமிழ்மேல் பற்றுகொண்ட அனைவரும் இணைந்து கொள்ளலாம்.