4-அயோடோபீனால்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
4-அயோடோபீனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-அயோடோபீனால்
வேறு பெயர்கள்
    • பா-அயோடோபீனால்
    • பாரா-அயோடோபீனால்
இனங்காட்டிகள்
540-38-5 Y
ChEBI CHEBI:43521
ChEMBL ChEMBL56475
ChemSpider 10432
DrugBank DB03002
EC number 208-745-5
InChI
  • InChI=1S/C6H5IO/c7-5-1-3-6(8)4-2-5/h1-4,8H
    Key: VSMDINRNYYEDRN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10894
  • C1=CC(=CC=C1O)I
UNII BH194BAK0B
பண்புகள்
C6H5IO
வாய்ப்பாட்டு எடை 220.01 g·mol−1
அடர்த்தி 1.8573 கி/செ,மீ3 (112 °செல்சியசு)[1]
உருகுநிலை 93.5 °C (200.3 °F; 366.6 K)[1]
கொதிநிலை 139 °C (282 °F; 412 K)[1] (5 மிமீபாதரசம்; சிதையும்)
காடித்தன்மை எண் (pKa) 9.33[2]
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
இடர் அறிக்கைகள்
H302, H312, H314
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P280, P305+351+338, P310
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

4-அயோடோபீனால் (4-Iodophenol) என்பது C6H5IO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-அயோடோபீனால் என்ற பெயராலும் இந்த கரிமச் சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. நிறமற்ற திண்மமாக 4-அயோடோபீனால் காணப்படுகிறது. அறியப்பட்டுள்ள மூன்று மோனோ அயோடோ பீனால்களில் இதுவும் ஒன்றாகும். 4-அயோடோபீனால் பல்வேறு பிணைப்பு வினைகளுக்கு உட்படுகிறது. சேர்மத்திலுள்ள அயோடின் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு பீனாலின் ஐதராக்சி குழுவிற்கு ஒரு புதிய கார்பன் குழு மாற்றப்படுகிறது.[3] புற்றுநோய் செல்களைக் கண்டறிவதற்காகவும்[4] மற்றும் நீரின் தர மதிப்பீட்டில் வேதியியல் ஒளியை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது.

4-அயோடோபீனாலை 4-அமினோபீனாலில் இருந்து ஈரசோசோனியம் உப்பு வழியாக தயாரிக்கலாம். ஒரு மாற்றுத் தயாரிப்பு முறையாக அயோடினுடன் சாலிசிலிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து கார்பாக்சில் நீக்கம் செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Haynes, p. 3.324
  2. Haynes, p. 5.93
  3. 3.0 3.1 "4-Iodophenol". Sigma-Aldrich.
  4. "4-Iodophenol". Fisher Scientific.
  5. Dains, F. B.; Eberly, Floyd (1935). "p-Iodophenol". Organic Syntheses 15: 39. doi:10.15227/orgsyn.015.0039. 

மேலும் வாசிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=4-அயோடோபீனால்&oldid=231833" இலிருந்து மீள்விக்கப்பட்டது