4ஜி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


4ஜி
முதல்பார்வைப் படம்
இயக்கம்வெங்கட் பக்கர்
தயாரிப்புசி. வி. குமார்
கதைவெங்கட் பக்கர்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
காயத்ரி சுரேஷ்
சுரேஷ் சந்திர மேனன்
சதீஸ்
ஒளிப்பதிவுடி. வி. தருண்பாலாஜி
படத்தொகுப்புலியோ ஜான் பால்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

4ஜி வெங்கட் பக்கர் இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ் குமார், காயத்ரி சுரேஷ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்திரைப்படம். இத்திரைப்படம் ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், டி. வி. தருண்பாலாஜி ஒளிப்பதிவில், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பில் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தின் படப்பணிகள் 2016இல் தொடங்கின.[1]

நடிப்பு

படப்பணிகள்

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப்பணிகள் 2016இல் தொடங்கின. இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பக்கர் இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றியவர். ஜி. வி. பிரகாஷ் குமாரும் சதீசும் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தமான பிறகு 2016இல் இப்படத்திற்கான தொடக்கவிழா நடைபெற்றது.[2][3] தன் மற்ற திரைப்படங்களின் பணிகளுக்கு ஊடாக இப்படத்தில் நடிப்பதாக பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். பல தமிழ்ப்படங்களில் 1990ஆம் ஆண்டு வாக்கில் நடித்துள்ள சுரேஷ் சந்திர மேனன் இப்படத்தில் நடித்துள்ளார்.[4] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நவம்பர் 2016இல் தொடங்கியது.[5]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=4ஜி_(திரைப்படம்)&oldid=29806" இருந்து மீள்விக்கப்பட்டது