2,6-இருகுளோரோபிரிடின்
படிமம்:C5H3Cl2N.svg | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,6-இருகுளோரோபிரிடின் | |
இனங்காட்டிகள் | |
2402-78-0 | |
ChEMBL | ChEMBL3561947 |
ChemSpider | 16095 |
EC number | 219-282-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16989 |
| |
UNII | WM26PC2SBW |
பண்புகள் | |
C5H3Cl2N | |
வாய்ப்பாட்டு எடை | 147.99 g·mol−1 |
உருகுநிலை | 86–89 °C (187–192 °F; 359–362 K) |
கொதிநிலை | 211–212 °C (412–414 °F; 484–485 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H315, H319, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,6-இருகுளோரோபிரிடின் (2,6-Dichloropyridine) என்பது C5H3Cl2N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மப் பொருளாக 2,6-இருகுளோரோபிரிடின் காணப்படுகிறது. இருகுளோரோபிரிடினின் ஆறு மாற்றிய வடிவங்களில் ஒன்றாக 2,6-இருகுளோரோபிரிடினும் அறியப்படுகிறது. நுண்ணுயிரிகளை அழிக்கவும் நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படும் மருந்து வகையான எனோக்சசின் என்ற மருந்தை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக 2,6-இருகுளோரோபிரிடின் பயன்படுகிறது.[1]
தயாரிப்பு
2,6-இருகுளோரோபிரிடினனை குளோரின் உடன் பிரிடீனை சேர்த்து நேரடியாக வினை புரியச் செய்வதன் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் 2-குளோரோபிரிடீன் ஓர் இடைநிலை வேதிப்பொருளாகும்.[1]
பாதுகாப்பு
சுண்டெலிகளுக்கு வாய்வழியாக 2,6-இருகுளோரோபிரிடின் சேர்மத்தை கொடுக்கும்போது இதன் உயிர் கொல்லும் அளவு 115 மி.கி/கி.கி ஆகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_399